என் மலர்
கடலூர்
- திருமணமான பெண்ணுக்கு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார்.
- பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் தினேஷ் (வயது 23) அவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அந்த பெண் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதனை பொருட்ப டுத்தாத தினேஷ் மீண்டும்மீண்டும் அந்த பெண்ணின் செல்போ னுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாகபேசியதால் கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்.
- வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர்.
- கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சிதம்பரம் டவுன், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவி, மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதளமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்தது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் புவனகிரி அருகே உள்ள வடகறிராஜபுறத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் சமூக அவலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மாணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இவர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் வழங்கி வருகிறார்கள்.
- சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
- மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடலூர்:
சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.
இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- வாலிபர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது.
கடலூர்:
சிதம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார். புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த வாலிபர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இவர் புவனகிரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை செய்வதும் தெரியவந்தது. இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக நடந்திருப்பது தெரியவந்தது.
- வேப்பூர் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 97 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
வேப்பூர் அருகே நல்லூர் கிராமத்திலுள்ள அரசு அனுமதி பெற்ற பாரில், திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், திருட்டு தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 97 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, பார் உரிமையாளர் வேப்பூர் அடுத்த இலங்கியனூரைச் சேர்ந்த ராஜா, என்பவரை கைது செய்தனர்.
- கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
- பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
வட தமிழகப் பகுதிகளில் மேல்வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் 14 சென்டிமீட்டர் மழை பெய்தது. மேலும் இந்த மழை கடலூர் மட்டுமல்லாமல் பண்ருட்டி, நெல்லி க்குப்பம், சிதம்பரம், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை காலை முதலும் நீடித்தது. இதனால் அலுவலகங்கள் மற்றும் பிற பணிகளுக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு மழை நீர் மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை, மரம் அறுக்கும் இயந்திரம் மேலும் ஜேசிபி உள்ளிட்ட மழைக்காலங்களில் பயன்படுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொருள்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகமானால் அங்குள்ள பொதுமக்களை விரை வாக வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கையும் நடவடிக்கையும் மாவட்டம் முழுவதும் சப் கலெக்டர் வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வேளாண் அதிகாரிகள் மூலமும் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.
- மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் வீடியோ வெளியிட்டவர் மீது புகார் செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.
இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் வீடியோ வெளியிட்டவர் மீது புகார் செய்தனர். புகார் மனுவில் தங்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி கணேசன் மீது புகார் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் பாலாஜி கணேசனை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
- பள்ளி பருவத்தில் காதல் ஜோடிகள்பள்ளி சீருடையில் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.
- அவர்களது பெற்றோரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சிதம்பரம் :
பள்ளி பருவத்தில் பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் எப்போதுமே எதிர்ப்பது வழக்கம் தான். ஆனால் இந்த பள்ளி பருவ காதலில் சுற்றும் காதல் ஜோடிகள் சினிமா தியேட்டர், பூங்கா என பொழுது போக்கு இடங்களில் பள்ளி சீருடையில் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.
அதற்கு எல்லாம் ஒருபடி மேலாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தாலி கட்டியுள்ளார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் சீருடையில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவர் வந்து அமர்கிறார். அப்போது அங்கு வந்த கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவியின் அருகில் அமர்கிறார்.
பின்னர், மாணவியின் கழுத்தில் அந்த மாணவர் தாலியை கட்டினார். அருகில் நின்ற மாணவியின் தோழிகள் சிலர் அவர்களுக்கு அட்சதையை தூவி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பாா்த்து அதிர்ச்சியடைந்த சிதம்பரம் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர்.
- கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சத்யா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு சதீஷ் (2) மகன் உள்ளார்.
நேற்று மாலை சிவமணி வீட்டில் இருந்த போது சவாரிக்கு வரவேண்டும் என்று செல்போன் அழைப்பு வந்தது. இதனை நம்பிய சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்.
அதன்பின்னர் இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்யா செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஒலித்து கொண்டே இருந்தது. போனை சிவமணி எடுக்கவில்லை.
பதறி போன சத்யா தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிவமணியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதோடு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போலபரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.
இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர். அப்போது கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.
உடனே போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த பெண்ணின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அந்த பெண் மாயமாகி விட்டார். அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை மடக்கி பிடித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.
எனினும் சிவமணி எதற்காக கொலை செய்யபட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், கூலிபடையினரால் சிவமணி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுபா மற்றும் அவரது மகன் ஜீவா கணேஷ் ஆகியோர் கடைக்கு சென்று வருவதாக தனது தாய் கவுரியிடம் தெரிவித்துவிட்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் செல்லங்குப்பம் சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபா (வயது 35). இவர்களது மகன் ஜீவகணேஷ் (வயது 12). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சுபா மற்றும் அவரது மகன் ஜீவா கணேஷ் ஆகியோர் கடைக்கு சென்று வருவதாக தனது தாய் கவுரியிடம் தெரிவித்துவிட்டு சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் இரண்டு பேரையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முது நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 38). எலெக்ட்ரிசியன். இவரது மனைவி நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், கடந்த அக்டோபர் 1- ந்தேதி மின் ஊழியர் பாஸ்கர் என்பவர் எனது கணவர் ஜேசுதாசை அழைத்துக் கொண்டு தேவனாம்பட்டினம் சுடுகாடு அருகே ட்ரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்ய கூறியதால், எனது கணவரும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.
பின்னர் இவரை மீட்டு கடலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ப்பட்டு, சென்னைக்கு கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். அப்போது இடது கை நீக்கப்பட்டது. ஆகையால் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் மின் ஊழியர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






