search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர் மழை
    X

    கடலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர் மழை

    • கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
    • பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    வட தமிழகப் பகுதிகளில் மேல்வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2,3 தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் 14 சென்டிமீட்டர் மழை பெய்தது. மேலும் இந்த மழை கடலூர் மட்டுமல்லாமல் பண்ருட்டி, நெல்லி க்குப்பம், சிதம்பரம், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை காலை முதலும் நீடித்தது. இதனால் அலுவலகங்கள் மற்றும் பிற பணிகளுக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு மழை நீர் மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை, மரம் அறுக்கும் இயந்திரம் மேலும் ஜேசிபி உள்ளிட்ட மழைக்காலங்களில் பயன்படுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொருள்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகமானால் அங்குள்ள பொதுமக்களை விரை வாக வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கையும் நடவடிக்கையும் மாவட்டம் முழுவதும் சப் கலெக்டர் வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வேளாண் அதிகாரிகள் மூலமும் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×