என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager who spoke obscenely"

    • திருமணமான பெண்ணுக்கு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார்.
    • பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் தினேஷ் (வயது 23) அவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அந்த பெண் வன்மையாக கண்டித்துள்ளார்.

    இதனை பொருட்ப டுத்தாத தினேஷ் மீண்டும்மீண்டும் அந்த பெண்ணின் செல்போ னுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாகபேசியதால் கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்.

    ×