வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது.கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இறந்த பெரியாசாமி
இறந்த பெரியாசாமி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதி வழியாக சென்றுள்ளார்.

அப்போது சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது. கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com