வடலூரில் முன்விரோதத்தில் வீடு புகுந்து பொருட்கள் சூறை

முருகன் வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ்,சதிஷ், சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர். முருகன் மனைவி தட்டி கேட்டபோது அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கைதான சதிஷ், நித்திஷ் இருவரையும் படத்தில் காணலாம்.
கைதான சதிஷ், நித்திஷ் இருவரையும் படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42)இவரது வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ், (22) சதிஷ், (27) சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

சம்பவத்தன்று முருகன் வீட்டில் இல்லாத சமயத்தில் நித்திஷ், சதிஷ், சக்தி, ஆகியோர் முருகனின் வீட்டின் கேட்டை உடைத்தும் பொருட்களை சேதப்படுத்தினர். இதனை முருகன் மனைவி தட்டி கேட்டார். உடனே அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில், வடலூர் போலீ சார்வழக்கு பதிவுசெய்து.நித்திஷ், சதிஷ், ஆகியோர்களை கைது செய்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com