search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3-வது புரட்டாசி சனிக்கிழமை முடிந்தது: கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்ட மக்கள்
    X

    மீன்வாங்க திரண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    3-வது புரட்டாசி சனிக்கிழமை முடிந்தது: கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்ட மக்கள்

    • பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர்.
    • இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரி புலியூர் ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கடலூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் வந்து மீன்கள் வாங்கி செல்வார்கள். புரட்டாசி மாதம் பிறந்த தில் இருந்து கடலூரை சேர்ந்த ஏராளமான மக்கள் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர். நேற்றுடன் 3-வது புரட்டாசி சனிக்கி ழமை முடிந்தது. எனவே கடலூரை சேர்ந்த பொது மக்கள் பெருமாளுக்குரிய விரதத்தை முடித்துக் கொண்டனர். இன்று காலை மீன் வாங்குவதற்காக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், முதுகநர், திருப்பாதிரி புலியூர் மீன் மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

    இதேபோல இறைச்சி கடையிலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் அலை மோதியது. இதனால் ஓரளவு விற்ப னையும் அதிகரித்தது.கூட்டம் அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது. விலை உயர்வு விபரம் வருமாறு:- சங்கரா ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும், வஞ்சரம் ரூ.700-ல இருந்து ரூ.800 ஆகவும், சீலா ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆகவும், இரால் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆகவும், கணவாய் ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆகவும், பாறை ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும், கானாங்கத்தை ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும் உள்ளது.

    Next Story
    ×