search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public protests"

    • கண்டரக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்பழமை வாய்ந்த சிவன் கோவி ல்சோமநா தஈஸ்வரர்கோவில் உள்ளது.
    • நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்பழமை வாய்ந்த சிவன் கோவி ல்சோமநா தஈஸ்வரர்கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் வளாகத்தில் விநாயகர்,முருகன், வீரப த்திரசாமி உள்ளிட்டசாமிசன்னதிகள் தனித்த னியாக அமைக்கப்பட்டிருந்தன. இந்து சமய அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இடிப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ப்பட்டதால் கடலூர் கலெக்டர்,பிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிதாக கோவில் கட்ட திட்ட அறிக்கையை தயார் செய்து நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கோவில் கட்ட 80 லட்சம் வழங்க தீர்மானிக்கப்பட்டது இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரா ம மக்கள் கோவில் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் வெற்றி வேல், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், நில எடுப்பு தாசில்தார் சாமிக்கண்ணு, நகாய் அலுவலர்கள்,ரிலையன்ஸ் அதிகா ரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், கோவில் அறங்கா வலர்கள் ராமானுஜம் ரெட்டியார், தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் துரைராஜ், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வக்கீல் மதனகுரு, அதிமுக பிரமுகர் சேகர்,நாட்டாமை டெல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கலியபெருமா ள்,சிவபூஷணம் ஆறுமுகம் லட்சுமணன்,சரவணன் மற்றும் வியாபாரி சங்க பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரண்டனர். சுமூக முடிவு ஏற்படாததால்வருவாய் வட்டா ட்சியர் அலு வலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×