என் மலர்
கடலூர்
- ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார்.
- அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கல்குணம் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுவதற்கு அதே பகுதியை சேர்ந்த கனகவல்லி என்பவர் தான் காரணம் என எண்ணிக்கொண்டு அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தி வீட்டில் இருந்த டிஷ் ஆண்டனாவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கனகவள்ளி கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அசோக், அன்பழகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
- கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரியை சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி விஜயா. இவர்களது மகள் கவுசல்யா, (வயது 24) இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவக்கும், கடந்த3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் திருப்பூரில் வேலை செய்து வருவதால், கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜயாஅளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தையல்நாயகி கணவர் இறந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
- தையல்நாயகி வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருகரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மனைவி தையல்நாயகி (வயது 67). இவரது கணவர் இறந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்க சென்றார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் மூதாட்டி வீட்டின் அருகில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது தையல்நாயகி வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
- கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்:
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர்.
இதன் நினைவு தினம் மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.
இன்று சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.
பின்னர் கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் பலர் தாங்கள் கொண்டுவந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்தபடி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டுவந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெண்கள் இறந்த குடும்பத்தினரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே கடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் பலர் இதனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.
கடந்த 18 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கி கடற்கரைப் பகுதிகள் அன்று எப்படி இருந்ததோ அதே போல் இன்றும் கடற்கரைப் பகுதியில் அழுகை மற்றும் அலறல் குரல் நிலைத்திருந்தது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
- ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூரை அடுத்த குடிதாங்கி சாவடியில் உள்ள ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் ரயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர் யார்? ரயில்வே டிராக்கினை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே டிராக்கில் இறந்து கிடந்தவர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.
- மோகன்ராஜ் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
- நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருேக தூக்கணாம்பாக்கம் பகுதி சின்ன குட்டியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி நந்தினி (வயது 27). சம்பவத்தன்று இவரது உறவினர் மோகன்ராஜ் என்பவர் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டிலிருந்த டிவி, கதவு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நந்தினி தரப்பினருக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் நந்தினி மற்றும் விஜயகுமார் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் மோகன்ராஜ், கலைவாணி, விஜயகுமார், கலையூரை சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோர் மீதும், விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, நந்தினி, காரைக்காட்டை சேர்ந்த ரமணி, ரம்யா உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து புதுப்பாளையம் நோக்கி மீராஷா (வயது 50) என்பவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கம்மியம்பேட்டை சாலைக்கு செல்வதற்காக டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மீராஷா தூக்கி வீசப்பட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியதால் டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தினார். இதனை தொடர்ந்து காயம் அடைந்த மீராஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.
- கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எறிந்தது.
- தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்துஎறிந்தது.தீமளமளவென பரவிஅடுத்தடுத்து ரவிச்சந்திரன், மங்கலட்சுமி ஆகியோர் வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
- டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ராஜ்குமார் மணிநகர் அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக வேலைசெய்துவருகிறார்.
- குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பக்கிரிபாளையம் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் பண்ருட்டி மணிநகர் அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக வேலைசெய்துவருகிறார். இவருக்கு கடந்த ஆண்டுதிருமணம்நடந்தது. 2 மாதத்திற்கு முன்பு இவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. இவரது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. குழந்தையை கடலூர்அ ரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தையைபரிசோதித்தமருத்துவர்கள் குழந்தை முன்பே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
- நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது.
- மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
ஏசு கிறிஸ்து டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன்படி நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் இரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்கு தந்தை வைத்து, திருப்பலி நடத்தினார்.
இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், குறிஞ்சிநகர் குழந்தை ஏசு ஆலயம், முதுநகர் பெந்தேகொஸ்தே சபை, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயம் போன்ற பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடலூர் ஏ.எல்.சி. தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரா ர்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவையொட்டி கடலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.






