கடலூர் அருகே ரயில்வே டிராக்கில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் உடல்

ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அருகே ரயில்வே டிராக்கில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் உடல்
Published on

கடலூர்:

கடலூரை அடுத்த குடிதாங்கி சாவடியில் உள்ள ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் ரயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்தவர் யார்? ரயில்வே டிராக்கினை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே டிராக்கில் இறந்து கிடந்தவர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com