என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் சேதமான வீட்டை படத்தில் காணலாம்.
பண்ருட்டி அருகே நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்
- கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எறிந்தது.
- தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்துஎறிந்தது.தீமளமளவென பரவிஅடுத்தடுத்து ரவிச்சந்திரன், மங்கலட்சுமி ஆகியோர் வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story






