என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அய்யப்ப பக்தர்கள் வந்த டெம்போ வேனில் திடீர் தீ: 8 பேர் உயிர் தப்பினர்
  X

  கொழுந்துவிட்டு எரிந்த  வேனை படத்தில் காணலாம்.

  சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அய்யப்ப பக்தர்கள் வந்த டெம்போ வேனில் திடீர் தீ: 8 பேர் உயிர் தப்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
  • சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.

  கடலூர்:

  சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர்.

  வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.

  இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Next Story
  ×