என் மலர்
கடலூர்
- முன்னாள் உதவியாளரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி, ராஜேந்திரன், பழனி, ராதா உள்பட 14 பேர் மீது வழக்கு
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அவரது முன்னாள் உதவியாளர் குமாருக்கும் இடையே பணம்-கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. குமார் கொடுக்க வேண்டிய பணம் குறித்து நேற்று எம்.சி.சம்பத்தின் சகோதரர் எம்.சி.தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், பழனி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது குமாரின் மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி ஆகியோர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி, ராஜேந்திரன், பழனி, ராதா உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராஜேந்திரன், ராதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எம்.சி.சம்பத் இன்று கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் கூறி உள்ளார்.
- மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி சுப்புராயன் பாபு திருமுருகன் சாவித்திரி ஆள வந்தார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
விசாரணை என்ற பெயரில் ஏற்கனவே பெற்று வரும் ஓய்வூதியத்தை முடக்குவதை கண்டித்தும், கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு தரமான வேட்டி, சேலை மற்றும் ஊக்கத்தொகை 5000 ரூபாய் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஓய்வூதியும் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும், ஆன்லைன் பதிவு குளறுபடியை சரி செய்திட வலியுறுத்தியும் கடலூர் செம்மண்டலம் மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் கண்டன உரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி சுப்புராயன் பாபு திருமுருகன் சாவித்திரி ஆள வந்தார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஏராளமான நிர்வாகிகள் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
- தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .
கடலூர்:
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக சிஐடியு சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் டியூட்டி ஆப் மற்றும் விடுப்பு கொடுத்துவிட்டு கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதற்கு நீதி கேட்டு பாய், தலையணை மற்றும் போர்வையுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை கடலூர் போக்குவரத்து அலுவலக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் மண்டல தலைவர் மணிகண்டன் துணை பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கண்ணன் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கையில் பாய் தலையணை மற்றும் போர்வைகளை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் . இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டு வந்தது
- திரு நெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
- இதனால் 10 ரூபாய் நாண யங்களை வைத்திருப்போர் கவலையில் உள்ளனர்.
கடலூர்:
இந்தியா முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயங்களை திரு நெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் மாவட் டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை கண்டாலே எடுத்துஎரிந்து பேசுகிறார்கள். அந்த நாணயங்களை டீக்கடை முதல் பெரிய கடைகள் வரை வாங்குவது கிடையாது.
இதனால் 10 ரூபாய் நாண யங்களை வைத்திருப்போர் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் 10 ரூபாய் நாணயங்களை மகிழ்ச்சி யுடன் வாங்கி வருகிறார். இதற்கான அறிவிப்பும் அந்த ஓட்டலில் ஒட்டப் பட்டுள்ளது. இதனை அறிந்த 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருக்கும் நபர்கள் அந்த ஓட்டலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர்.
- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத். இவர் தொழில் துறை அமைச்சராக இருந்த போது நேர்முக உதவியாளராக மேல் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இருந்து வந்தார்.
இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், அண்ணன் எம்.சி. தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமார் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோரை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இத்தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கடும் குற்றம்சாட்டி இருந்தனர்.
இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- ஜோஸ்வின் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா?
கடலூர்:
கடலூர் சாவடியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜோஸ்வின் (வயது 42). இவர் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜோஸ்வின் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஜோஸ்வினுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி முதல் மீண்டும் மருத்துவ விடுப்பு நீடிக்க வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுப்பு தரவில்லை என கூறப்படு கிறது. இதன் காரணமாக ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- சாம்பல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர்.
கடலூர்:
விருத்தாச்சலம் அருகே தொரவலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன். இந்த தம்பதி மகள் ஓவியா (வயது 15). விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஓவியாவின் பெற்றோ ர்கள், மேல்ம ருவத்தூர் கோவிலுக்கு சென்றதினால், பள்ளி யிலிருந்து அவர்களது மகளை, வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, அதே ஊரை சேர்ந்த, உறவினரான குமாரசாமி (64) என்பவர் தனது பேரனான தருணுடன் (6), மோட்டார் சைக்கிளில் சென்றார். பள்ளியில் மாணவி ஓவியாவை அழைத்து கொண்டு தொரவளுர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமாரசாமி ஓட்டி வந்துள்ளார்.
அப்போது நெய்வே லியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொ ண்டு, கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக விருத்தா ச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல்அறிந்த போலீசார் 3 பேர் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை, வேப்பூரில் ேபாலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஒட்டி வந்த விருத்தாசலம் அருகே மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். சாலை விபத்தில் பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் தொரவலூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
- அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது.
- சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது. இந்த நிலையில் துப்புரவு பெண் ஊழியர் ஒருவர் காசநோய் மையம் வளாகத்தில் சுத்தம் செய்வதற்காக ஓரத்தில் இருந்த துடைப்பத்தை எடுப்பதற்கு சென்றார்.
அப்போது சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் துப்புரவு ஊழியர் அலறி அடித்து ஓடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வன ஆர்வலர் செல்லாவிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வன ஆர்வலர் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த சிறிய அளவிலான நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் முழுவதும் செடிகளும் முட்பு தர்களும் அதிக அளவில் உள்ளன. ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிக அளவில் வரக்கூடிய தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏதேனும் பாம்புகள் உள்ளதா? என்பதனை கண்டறிந்து அதனை பிடிப்பதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 8 அடி உயரத்தில் கரையை பலப்படுத்தப்பட்டது.
- அவருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் சேதமடைந்து இருந்தது.
கடலூர்:
கடலூர் கம்மியம் பேட்டை சாலை அருகே கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருபுறமும் சுமார் 8 அடி உயரத்தில் கரையை பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கம்மிய ம்பேட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மாலை கம்மியம்பேட்டை சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஷேர் ஆட்டோ ஓட்டுனர், கம்மியம்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் சாலையில் ஓரத்தில் 10 அடி ஆழத்தில் கெடிலம் ஆற்றில் திடீரென்று ஷேர் ஆட்டோ பாய்ந்து கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென்று ஆட்டோவில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, பள்ளத்தில் குதித்த ஆட்டோ டிரைவரை பாதுகாப்பாக மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் சேதமடைந்து இருந்தது. அதனை தொடர்ந்து சேதமடைந்த ஷேர் ஆட்டோ மீட்கும் பணியில் டிரைவர் ஈடுபட்டார். இந்த நிலையில் கெடிலம் ஆறு ஓரமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு தடுப்பு கட்டைகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளும், லாரிகளும் மோதியது.
- இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கடலூர்:
கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லாரிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
- இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது.
கடலூர்:
கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார் இன்று காலை ராமநாதன்குப்பம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் லாரியில் சென்று பார்த்த போது 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது பெரிய வந்தது. மேலும் இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட இரும்பு பொருட்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? லாரியில் பதிவு எண் மற்றும் முக்கிய எண்களை அழிக்கப்பட்டதால் திருட்டு லாரி? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குறிஞ்சிப்பாடியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன.
- சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருகிறது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடிக்கு அருகில் உள்ள கல்குணம் பூதம்பாடி ஓணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் மடிந்தன.
தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த புகையான் பூச்சிகளை அழிக்க பல கம்பெனிகளின் மருந்துகளை தெளித்தும் பயனில்லை. இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்க முன்வரவில்லை.
எனவே, வேளாண்துறை உயரதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் குணம்மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் தனி கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.






