search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto plunged into river"

    • பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 8 அடி உயரத்தில் கரையை பலப்படுத்தப்பட்டது.
    • அவருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் சேதமடைந்து இருந்தது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம் பேட்டை சாலை அருகே கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருபுறமும் சுமார் 8 அடி உயரத்தில் கரையை பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கம்மிய ம்பேட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மாலை கம்மியம்பேட்டை சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஷேர் ஆட்டோ ஓட்டுனர், கம்மியம்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் சாலையில் ஓரத்தில் 10 அடி ஆழத்தில் கெடிலம் ஆற்றில் திடீரென்று ஷேர் ஆட்டோ பாய்ந்து கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென்று ஆட்டோவில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, பள்ளத்தில் குதித்த ஆட்டோ டிரைவரை பாதுகாப்பாக மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் சேதமடைந்து இருந்தது. அதனை தொடர்ந்து சேதமடைந்த ஷேர் ஆட்டோ மீட்கும் பணியில் டிரைவர் ஈடுபட்டார். இந்த நிலையில் கெடிலம் ஆறு ஓரமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு தடுப்பு கட்டைகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×