என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிைகக்கு ரூ.5 ஆயிரம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
    X

      சி.ஐ‌.டி.யு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    பொங்கல் பண்டிைகக்கு ரூ.5 ஆயிரம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

    • மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் சி.ஐ‌.டி.யு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி சுப்புராயன் பாபு திருமுருகன் சாவித்திரி ஆள வந்தார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்‌.

    கடலூர்:

    விசாரணை என்ற பெயரில் ஏற்கனவே பெற்று வரும் ஓய்வூதியத்தை முடக்குவதை கண்டித்தும், கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு தரமான வேட்டி, சேலை மற்றும் ஊக்கத்தொகை 5000 ரூபாய் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஓய்வூதியும் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும், ஆன்லைன் பதிவு குளறுபடியை சரி செய்திட வலியுறுத்தியும் கடலூர் செம்மண்டலம் மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் கண்டன உரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி சுப்புராயன் பாபு திருமுருகன் சாவித்திரி ஆள வந்தார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஏராளமான நிர்வாகிகள் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×