search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல்
    X

    முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல்

    • முன்னாள் உதவியாளரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி, ராஜேந்திரன், பழனி, ராதா உள்பட 14 பேர் மீது வழக்கு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அவரது முன்னாள் உதவியாளர் குமாருக்கும் இடையே பணம்-கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. குமார் கொடுக்க வேண்டிய பணம் குறித்து நேற்று எம்.சி.சம்பத்தின் சகோதரர் எம்.சி.தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், பழனி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது குமாரின் மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி ஆகியோர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி, ராஜேந்திரன், பழனி, ராதா உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராஜேந்திரன், ராதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எம்.சி.சம்பத் இன்று கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் கூறி உள்ளார்.

    Next Story
    ×