search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  லாரியில் கடத்தப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் பறிமுதல்: 2 பேர் தப்பி ஓட்டம்
    X

    கடலூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் பறிமுதல்: 2 பேர் தப்பி ஓட்டம்

    • போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
    • இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார் இன்று காலை ராமநாதன்குப்பம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் லாரியில் சென்று பார்த்த போது 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது பெரிய வந்தது. மேலும் இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட இரும்பு பொருட்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? லாரியில் பதிவு எண் மற்றும் முக்கிய எண்களை அழிக்கப்பட்டதால் திருட்டு லாரி? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×