என் மலர்
கடலூர்
- மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற குற்றத்திற்காகஅவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
- ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு
- சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் ஜெயின் சங்கத்தினர் கடை அடைப்பு அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெயின் சங்க நிர்வாகிகள் கமல் கிஷோர் ஜெயின், தீபக்குமார், சர்ஜன்ராஜ், சூரஜ்மல், ஜினேந்திரகுமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில் ஜார்கண்ட் மாநிலம் சிக்கர்ஜி மஹா தீர்த்தம் (பரஷ்வநாதர்) மற்றும் குஜராத் மாநிலம் சத்துருஞ்சை மஹா தீர்த்தம் (ஆதிநாதர்) ஆகிய ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 6-1-2023 ஒரு நாள் மட்டும் சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.
- வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.
- லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
வேப்பூர்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, தேரிழந்தூர் பகுதி, சிவன்கோவில் கீழவீதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). இவர் லாரியில் உளுந்தூர்பேட்டையில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.
இதில் லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியின் டிரைவர் சரத்குமாருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
- மாலை 4 மணியளவில் நடராஜ சுவாமிகள் நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரானது நேற்று மாலை 6 மணியளவில் கீழரத வீதியில் உள்ள தேர் நிலைக்கு வந்தடைந்தது.
அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களின் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடந்தது. நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரின் அருளை பெறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.
தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
விழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், வர்த்தகர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்காக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
- உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் 2-வது நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படும். அந்த வகையில் நேற்று காலை தொழிலாளர்களுக்கு இட்லி, பூரி, தயிர் சாதம், வடை வழங்கப்பட்டது. இதை சுரங்க பகுதியில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 21 தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த உணவு வினியோகம் செய்த ஊழியர் தான் வைத்திருந்த உணவு பொருட்களை பார்த்தபோது, தயிர் சாதத்தில் எலி ஒன்று செத்துக்கிடந்தது.
இதனால் பதறிய அந்த ஊழியர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே அங்கிருந்த சக தொழிலாளர்கள் 21 தொழிலாளர்களையும் மீட்டு என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூரை அடுத்த வெங்கடாம் பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). விவசாயி. கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரது மனைவி மகேஸ்வரி சக்திவேலை திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
- சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் புருக்கீஸ் பேட்டை சேர்ந்தவர் ரேவை (வயது 70). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு மற்றும் சிலர் பணம் கடனாக வாங்கினர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் மூதாட்டி ரேவை மற்றும் விஜயலட்சுமி ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி ரேவை கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு மற்றும் 4 பேர் மீதும், ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மூதாட்டி ரேவை மற்றும் 6 பேர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வகுமார் தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக திருப்பாதிரிப்புலியூர் மின்சாரத்துறை அலுவல கத்திற்கு சென்று உள்ளார்.
- மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு செல்வகுமாரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சேர்ந்தவர் செல்வ குமார். இவர் தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக திருப்பாதிரிப்புலியூர் மின்சாரத்துறை அலுவல கத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த உதவி செயற் பொறியாளர் சசிகுமார், மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு செல்வகுமாரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது குறித்து செல்வகுமார் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார ளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரசாயனம் கலந்த பணத்தை செல்வகுமாரிடம் கொடுத்து மின்சார துறை உதவி செயற்பொறியாளர் சசிகுமாரிடம் கொடுக்க அறிவுறுத்தினர். மேலும் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின்சார துறை அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.
அப்போது செல்வகுமார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை உதவி செயற்பொறியாளர் சசிகுமாரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சசிகுமாரை பிடித்து அவரிடம் இருந்த ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை அதிரடியாக பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் தொடர் விசாரணைக்காக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
- ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
- 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் :
வடலூர் ராகவேந்தி ரா சிட்டியில் தேசியமய மாக்கப்பட்ட இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் முகப்பில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவே மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதோடு, அதிலிருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீதமிருந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் வடலூர் கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 56), வடலூர் ஆர்.கே. நகர் ராஜேந்திரன் (34), நெய்வேலி இந்திராநகர் ராஜா (42) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சம்மந்தம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் ஏராளமாக உள்ளன.
- விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலை அடைந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சம்மந்தம் (வயது 36 ). இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி நேற்று அதிகாலை 3 மணியள வில் சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றனர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கிறார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பனை மர உரிமையாளர் சம்பந்தத்தை போலீசார் கைது செய்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கியது, அதில் ஊமத்தங்காய் கலந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்தார். மேலும், இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்க ப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் :
வடலூர் அருகே ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 68). இவரது அக்கா வளர்மதி வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் போது அங்கிருந்த, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் எதற்காக எங்கள் வீட்டின் முன்புறம் பார்த்த வண்ணமாக கேமராவை வைக்கிறார்கள். என்று கேட்டு 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றவே திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரு நபர் ராஜாக்கண்ணுவின் மூக்கை வெட்டினார். மற்றொரு நபர் இரும்பு பைப்பினால் தலையில் கொடுரமாக தாக்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த முதியவர் ராஜாக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜாக்கண்ணு வடலூர் போலீசில், அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்த மகாராஜன் (27), சூர்யா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேன்மொழி கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலூர்:
கோண்டூர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தேன் மொழியை அவரது மகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேன்மொழியை கண்டு பிடிக்கும்படி அவரது மகள் கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.






