வடலூர் அருகே முதியவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வடலூர் அருகே முதியவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
Published on

கடலூர் :

வடலூர் அருகே ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 68). இவரது அக்கா வளர்மதி வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் போது அங்கிருந்த, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் எதற்காக எங்கள் வீட்டின் முன்புறம் பார்த்த வண்ணமாக கேமராவை வைக்கிறார்கள். என்று கேட்டு 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றவே திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரு நபர் ராஜாக்கண்ணுவின் மூக்கை வெட்டினார். மற்றொரு நபர் இரும்பு பைப்பினால் தலையில் கொடுரமாக தாக்கினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த முதியவர் ராஜாக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜாக்கண்ணு வடலூர் போலீசில், அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்த மகாராஜன் (27), சூர்யா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com