search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jain Sangam"

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஜெயின் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    இந்திய அரசிடம் ஜைன புண்ணிய ஸ்தலங்களை பாதுகாக்க கோரியும், ஜெயின்களின் புனித ஸ்தலமான ஜார்கண்ட் மாநிலத்தின் சம்தே சிகரம் மற்றும் குஜராத் மாநிலத்தின் சத்ருஞ்ஜய் மலை, கிர்னார்ஜி ஆகியவற்றை சுற்றுலா ஸ்தலங்களாக அறிவித்த செயலை திரும்ப பெறவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் கடலூர் ஜெயின் சங்கம் சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஜெயின் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு துணைத் தலைவர் வீரேந்திரகுமார் உத்தாட் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார் மேத்தா முன்னிலை வகித்தார். இதில் மாவீர்மல் சோரடியா, தில்சுக்மல் மேத்தா, குசல்ராஜ் தாரிவால், பாரஸ்ஜிகோட்டாரி, ஷோபாக்மல்சான்ட் ஆனந்தகுமார் மேத்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு
    • சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் ஜெயின் சங்கத்தினர் கடை அடைப்பு அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெயின் சங்க நிர்வாகிகள் கமல் கிஷோர் ஜெயின், தீபக்குமார், சர்ஜன்ராஜ், சூரஜ்மல், ஜினேந்திரகுமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில் ஜார்கண்ட் மாநிலம் சிக்கர்ஜி மஹா தீர்த்தம் (பரஷ்வநாதர்) மற்றும் குஜராத் மாநிலம் சத்துருஞ்சை மஹா தீர்த்தம் (ஆதிநாதர்) ஆகிய ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 6-1-2023 ஒரு நாள் மட்டும் சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.

    ×