என் மலர்
நீங்கள் தேடியது "Officer who took bribe"
- செல்வகுமார் தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக திருப்பாதிரிப்புலியூர் மின்சாரத்துறை அலுவல கத்திற்கு சென்று உள்ளார்.
- மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு செல்வகுமாரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சேர்ந்தவர் செல்வ குமார். இவர் தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக திருப்பாதிரிப்புலியூர் மின்சாரத்துறை அலுவல கத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த உதவி செயற் பொறியாளர் சசிகுமார், மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு செல்வகுமாரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது குறித்து செல்வகுமார் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார ளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரசாயனம் கலந்த பணத்தை செல்வகுமாரிடம் கொடுத்து மின்சார துறை உதவி செயற்பொறியாளர் சசிகுமாரிடம் கொடுக்க அறிவுறுத்தினர். மேலும் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின்சார துறை அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.
அப்போது செல்வகுமார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை உதவி செயற்பொறியாளர் சசிகுமாரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சசிகுமாரை பிடித்து அவரிடம் இருந்த ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை அதிரடியாக பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் தொடர் விசாரணைக்காக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.






