என் மலர்tooltip icon

    கடலூர்

    • ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை
    • இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் ராஜவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கடலூர்:

    வடலூர் அருகே ஆபத்தானபுரத்தைச் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். காலையில் எழுந்து ரூமிலிருந்து வெளியில் வர கதவைத் திறந்தார். கதவை திறக்க முடியவில்லை. இதனால் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை திறந்து ஆறுமுகம் குடும்பாத்தாரை பொது மக்கள் வெளியில் அழைத்து வந்தனர். வெளியில் வந்த ஆறுமுகம், வீட்டிலிருந்த மற்றொரு ரூமுக்கு சென்றார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.    இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வெளிப்புற கதவை பூட்டாததால் உள்ளே வந்த கொள்ளையர்கள், ரூமில் படுத்திருந்தவர்கள் வெளியில் வராமல் இருக்க கதவை பூட்டி விட்டனர். பின்னர் மற்றொரு ரூமிற்கு சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வடலூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.
    • இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.இதனை கண்டித்து கல்லூரியின் மாணவர்கள் 500 -க்குமேற்பட்டோர்அவரை மீண்டும் இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

    • கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி மற்றும் மனைபிரிவுகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கீதா ஆகியோர் கடலூர் மாநகராட்சி அலு வலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கடலூர் நகரமைப்பு அலுவலகத்தில் கட்டிட அனுமதி மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அக்கோப்புகள் அனைத்தும் கடலூர் நகர பகுதியில் இயங்கி வரும் 2 தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு அந்நிறுவனங்களால் பரிசீலனையும் செய்யப்பட்டு அங்கேயே அனுமதி அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிறுவனத்திலும் அதன் அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சோதனையில் கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் அந்த நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருவதும், அங்கு 15-க்கும் மேற்பட்டோர் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருவதும், அரசு அலுவலகங்களில் நடைபெற வேண்டிய பணிகள் இந்த நிறுவனங்களில் நடை பெற்று வருவதும் கண்டறியப்பட்டது.

    அங்கிருந்த கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வர வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கைப்பற்றினார்கள்.

    மேலும் இந்த இரு நிறுவனங்களிலும் அரசு அலுவலர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த கமிஷன் தொகை ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது.

    • மணிகண்டன் (வயது 49)மனைவி நந்தினி (25) லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.
    • இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

    கடலூர்:

    மந்தாரக்குப்பம் செக்கடி தெரு குமார் மகன் மணிகண்டன் (வயது 49)கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25) என்எல்சி இடத்தில் மதியழகன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். நேற்று வடலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட நந்தினியின் தங்கை திவ்யா போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக புறப்பட்டு வந்தனர். இருவரும் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமா கின.இதில், வீட்டில் இருந்த ஜவ் அடுப்பு, துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.

    இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானர். மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தைகூறி கடத்தி சென்று சென்னையில்பதுங்கியிருப்பதுதெரிந்தது,
    • தனிப்படை போலீஸார், மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் மாயமானர். இது குறித்து சிறுமியின் தந்தை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று சென்னையில் பதுங்கியிருப்பது போலீ சாருக்கு தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். மதியழகனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பரமசிவம் இவரது மகள் மணிமொழி (25) இவர் வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்..
    • .சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த கீழச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் மணிமொழி (25) இவர் வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கு விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து பரமசிவம் கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது
    • முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான தனி படை, சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி காந்தி ரோடு அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தளர். பின்னர் முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே இவர், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    வடலூர் ஓ.பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஞானம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமபந்தம மகள் தீபா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23).கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்.
    • கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23). இவர் கடந்த 16 .10. 2014 அன்று கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்  அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்    இதனையடுத்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மகனை இழந்த ராஜேந்திரனின் தந்தை சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்டஈடு கேட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

      வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 .4 .2018 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 12 லட்சத்து 24ஆயிரம் தொகை மற்றும் வழக்கு செலவுகளுக்கான தொகை ஆகியவற்றை நஷ்ட ஈடாக ராஜேந்திரன் தந்தை சேகரிடம், செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.நஷ்ட ஈடு தொகையை மூன்று தவணைகளாக செலுத்திய நிலையில், பாக்கித் தொகையை அளிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் நஷ்ட ஈடு தொகை அளிக்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட்டு அமீனா காசிநாதன் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினர்.மனுதாரர் தரப்பில்ள் வக்கீல்கள் ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் வாதாடினர்.

    • ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமை யிலான தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டியை அடுத்த பெரிய எலந்தம்பட்டு அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார்.
    • . இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்‌

    கடலூர்:

    கடலூர் அடுத்த அரிசி பெரியங்குப்பம் சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று கலை யரசன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து கலையரசனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர்ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×