என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது காலை இழந்த மாணவர்
    X

    ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது காலை இழந்த மாணவர்

    • கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது.
    • ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை மீட்டனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் கால் ரெயிலில் சிக்கி துண்டானது. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது. கால் துண்டாகி வலியால் துடித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை மீட்டு, துண்டான காலோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×