என் மலர்
உள்ளூர் செய்திகள்

மந்தாரக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் வீட்டின் கூரை, பீரோ, சிதறிக் கடந்த பொருட்களில் இருந்த கைரைகைகளை பதிவு செய்தனர்.
- வீடுகள் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள மந்தாரக்குப்பம் பெரியார் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் 2 தினங்களுக்கு முன்னர் வெளியூர் சென்றார்.
இன்று காலை வீடு திரும்பினார். அப்போது கூரை வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சயடைந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வீட்டின் கூரை, பீரோ, சிதறிக் கடந்த பொருட்களில் இருந்த கைரைகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் மீது மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடுகள் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






