கடலூர் முதுநகரில் குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லைஇதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர் முதுநகரில்  குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் ராஜவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com