என் மலர்
கோயம்புத்தூர்
- சத்தியவேணி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவேணியின் மொபட் மீது மோதியது.
கவுண்டம்பாளையம்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வஞ்சிமாநகரை சேர்ந்தவர் முனுசாமி.
இவரது மனைவி சத்தியவேணி(வயது53). இவர் பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் சம்பவத்தன்று மாலை தனது வீட்டில் இருந்து மொபட்டில் வேலை விஷயமாக நரசிம்ம நாயக்கன் பாளையத்திற்கு சென்றார். அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் கோவை –மேட்டுப்பாளையம் ரோட்டில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இவரது மொபட் தெற்குபா ளையம் பிரிவு அருகே வந்து கொண்டி ருந்தது.
அப்போது இவருக்கு பின்னால் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென பின்னால் வேகமாக வந்த வேன் , கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவாணியின் மொபட் மீது மோதியது.
இதில் சத்தியவாணி மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து பெரியநா யக்கன்பாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த நிலையில் இந்த விபத்து காட்சிகள், அந்த பகுதியில் இருந்த டீக்கடையில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவில், சத்தியவாணி மொபட்டில் வந்து கொண்டிருக்கிறார்.அப்போது பின்னால் வந்த வேன் திடீரென வேகமாக வந்து மொபட் மீது மோதுகிறது. அத்துடன் நிற்காமல் சத்தியவாணிக்கு முன் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதுகிறது.
மோதிய வேகத்தில் மொபட்டில் இருந்த தலைமை ஆசிரியை தூக்கி சாலையில் வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
- கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது.
- பொது இடங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் இணை நோய் பாதிப்பு உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சுகாதா ரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருப்பினும் முன்னெச்சரி க்கையாக தயார் நிலையில் இருக்கிறோம். கொரோனா பரவல் இருப்பதால், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, எச்ஐவி, கேன்சர், ரேடியோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது, தடுப்பூசி செலுத்தியவ ர்களையும் கொரோனா பாதித்து வருகிறது.
எனவே, வயதானவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிகம் கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்லும் போதும், பொதுஇட ங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பு மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு திணறல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சாதிக் செல்போன் கடை நடத்தி வருகிறார்
- 7 செல்போன்கள் திருட்டு போனது.
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் அஹ்மத் சாதிக் (வயது 27). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 7 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வால்பாறையை சேர்ந்த 13, 14 வயதுடைய சிறுவர்கள் என்பதும், 2 பேரும் கடையில் செல்போன்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 சிறுவர்களையும் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- நாகரத்தினம் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
- போலீசார் இந்திரராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (35). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகரத்தினம் காலையில் வேலைக்கு சென்றார். இதனையடுத்து இவரது மனைவி வீட்டைப் பூட்டி விட்டு சாவியை குளியலறையில் வைத்துவிட்டு நுங்கு விற்பனைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பேரூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை திருடியது கஞ்சபட்டி செட்டியார் காலனியை சேர்ந்த இந்திரராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
- இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
கோவை:
கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22). லேப் டெக்னீசியன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் ஜெயஸ்ரீக்கு, நம்புகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஜெயஸ்ரீயும், நம்புகுமாரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
நம்புகுமார் தினமும் மது குடித்து விட்டு ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
- வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சர கத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில் எருமைபாறை வனக்கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் ஆகிய வற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள பழங்குடியின கிராமங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி ன் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:-
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே கேரள மாநிலத்தின் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள், நடைபாதைகள், வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன. ஆனால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசு மறுக்கிறது. குறிப்பாக எருமை பாறை பழங்குடியின கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் மாற்றி அமைக்கப்பட்டும், இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை.
கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு நிலத்தடி யில் புதை வட கம்பி அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் சாலை வசதிகளை மேம்படு த்தி தர வேண்டும். பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு என வன த்துறை சோதனைச்சா வடி களில் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்ப டுகிறது.
உலாந்தி வனச்சரகத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வனத்துறையில் பணிபுரியும் பழங்குடியின ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு அளித்த இலவச பொருட்களான இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றுக்கு மலர் வளையம் வைத்து உலாந்தி வனச்சரகர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி துடியலூரில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சரவணம்ப ட்டி போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனை யில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர்கள் புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33), திருப்பூர் மங்கலத்தை சேர்ந்த முகமது ஆசிப் (24), திண்டுக்கல் முத்து நகரை சேர்ந்த மதன்தாஸ் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த ராஞ்சியை சேர்ந்த 25 வயது அழகி, பெங்களூரை சேர்ந்த 33 வயது அழகி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 21 வயது அழகி, குஜராத்தை சேர்ந்த 27 வயது அழகி, டெல்லியை சேர்ந்த 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.
அவர்கள் 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படை த்தனர். கைது செய்யப்பட்ட 3 புரோக்கர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதேபோல காட்டூர் அலமு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புதுச்சேரியை சேர்ந்த புரோக்கர் சூர்ய பிரகாஷ் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் வீட்டில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த குஜராத்தை சேர்ந்த 20 வயது அழகியை போலீசார் மீட்டனர்.
அவரை ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் சூர்ய பிரகாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் விபரீத முடிவை எடுத்தார்.
- துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பா ளையம் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் செல்லபாண்டி (வயது 27). கட்டிட தொழிலாளி.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று செல்ல பாண்டி தனது பெற்றோ ரிடம் தான் காதலிக்கும் இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். ஆனால் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செல்லபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
- மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் 22 வயது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். எனவே மாணவர் தனது காதலியை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்வது என முடிவு சென்றார்.
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவரை மாணவர் திருத்துறைபூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
தங்களது மகளை மாணவர் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் திருத்துறைபூண்டியில் உறவினர் வீட்டில் காதலனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
பின்னர் போலீசார் 2 பேரையும் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்து அழைத்து வந்தனர். விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு 17 வயது என்பதால் அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து முதியவரின் தலையில் விழுந்தது.
- ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் தியாகராய புது வீதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நேற்று மதியம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை.இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரூ. 19 லட்சம் மதிப்பிலான 295 கிராம் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
- ேபாலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு வாரம் ஒரு முறை வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் நகைக்கடையில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ. 19 லட்சம் மதிப்பிலான 295 கிராம் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நகைக்கடை மேலாளர், உதவி மேலாளர் சசிக்குமார் என்பவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நகைகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ததாகவும், அதற்குண்டான பணம் ரூ.19 லட்சத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார்.
மேலும் அவர் ரூ. 19 லட்சத்துக்கு காசோலையையும் கொடுத்தார். அந்த காசோலையை காந்திபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்திய போது கையொப்பம் பொருந்தாமல் திரும்பியது.
உதவி மேலாளர் சசிக்குமார் விற்பனை செய்த நகைக்கான பணத்தை கொடுக்காமல் ரூ. 19 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு சசிக்குமாருக்கு அவருடன் வேலை பார்க்கும் விஜயன், ரமேஷ் ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர்.
இது குறித்து நகைக்கடை மேலாளர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நகைக்கடை உதவி மேலாளர் சசிக்குமார், விஜயன், ரமேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.
- காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டு யானை,மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன் ஒருபகுதியாக கடந்த சில தினங்களாகவே மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் ஒற்றைக்காட்டு யானை பாகுபலி சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் உலா வருவதும், பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவதுமாக இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது பாகுபலி யானையுடன் மேலும் இரண்டு யானைகள் கூட்டு சேர்ந்து அதே பகுதியில் முகாமிடத் தொடங்கியுள்ளன. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சமயபுரம் பகுதி பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- ஆஜானுபாகுமான உடலமைப்பு மற்றும் பெரிய தந்தங்களுடன் கூடிய யானை என்பதால் அதற்கு பாகுபலி என பெயரிட்டு வந்து அழைத்து வருவதாகவும்,கடந்த சில தினங்களாகவே ஒற்றைக்காட்டு யானை பாகுபலி தங்கள் பகுதியில் முகாமிட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 2 யானைகளும் அதனுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் வசிக்கும் தாங்கள் மிகுந்த அச்சத்துடன் உடனேயே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






