என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சிறுமுகை இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன்.

    இவரது மனைவி சின்னம்மாள்(வயது67). இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 பேர் நுழைந்தனர்.

    அவர்கள் வந்த வேகத்தில் மூதாட்டியின் தலையில் இரும்பு ராடால் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து சின்னம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் இவர் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருவதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு யார்? யாரெல்லாம் வந்து சென்றனர் என்ற தகவல்களை சேகரித்தனர்.

    இதில் சிறுமுகை பாரதி நகரை சேர்ந்த சர்மா(21), மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்த முகமது அம்ரித்(21), சிறுமுகை ஜிவா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் தான் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சிறுமுகை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினர்.

    • ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.
    • போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குனியமுத்தூர்

    கோவை உக்கடம், டவுன்ஹாலில் இருந்து காந்திபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் லங்கா கார்னர் பாலம் வழியாக செல்கிறது. அப்போது அந்த வாகனங்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.

    இதனால் லங்கா கார்னர் பாலம் அருகில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் உக்கடத்தில் இருந்து லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.

    அப்படி செல்லும்போது பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லும் பயணிகளை லங்கா கார்னர் பாலம் அருகிலேயே நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.

    இதனால் அப்பக தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே லங்கா கார்னர் பாலம் அருகே பஸ்களை நிறுத்தாமல் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றால், அந்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். ெரயில் நிலையம், லங்கா கார்னர் பாலத்திற்கு இடையே அதிக தூரம் இல்லை.

    எனவே பொதுமக்கள் ரயில் நிலைய ஸ்டாப்பில் இறங்கி, பெரிய ஆஸ்பத்திரிக்கு சுலபமாக நடந்து செல்லாம். இல்லையெனில் உக்கடம், டவுன்ஹாலில் இருந்து வரும் பஸ்கள் லங்கா கார்னர் பாலத்தில் இடதுபுறம் திரும்பாமல் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் சென்று வரலாம். அதன்பிறகு ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று அடையலாம்.

    பெரிய ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்ப 5 நிமிடம் ஆகும். ஆனால் பஸ் டிரைவர்கள் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் லங்கா ஹார்னர் பாலத்தில் இருந்தே இடதுபுறம் திரும்பி விடுகின்றனர். இதனால்தான் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பணம் கொடுத்தால் சுற்றுலாதுறையில் வேலை வாங்கி கொடுக்க முடியும் என ஆசை வார்த்தை கூறினர்.
    • நவீன்குமார் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் சூசையாபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது33). இவர் படித்து முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார்.

    இந்தநிலையில் நவீன்குமாருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

    2 பேரும் நவீன்குமாரிடம், தங்களுக்கு தெரிந்த அதிகாரி சுற்றுலாதுறையில் வேலை பார்ப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி கொடுக்க முடியும் என ஆசை வார்த்தை கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரிடமும் அரசு வேலைக்காக ரூ.7 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறிய படி வேலை வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் தான் ஏமாற்ற ப்பட்டதை உணர்ந்த நவீன்குமார் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சுற்றுலா துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பருத்தி 2022-23-ம் ஆண்டில் 1.62 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.56 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • நல்ல விலையை எதிர்பார்த்து பருத்தி விவசாயிகள் வைத்திருந்த கையிருப்பு சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் பருத்திக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டின் மொத்த இழைப்பயிர் நுகர்வில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பங்களிப்பை வழங்குவதன் மூலம் இந்தியாவில் ஜவுளி தொழிலை பருத்தி நிலை நிறுத்துகிறது.

    இந்திய ஜவுளி அமைச்சகத்தின்படி 2022-23-ம் ஆண்டில் பருத்தி 130.61 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 343.47 லட்சம் பேல்கன் (1 பேல்-170 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தியாவில், குறுராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருத்தியை அதிகளவு உற்பத்தி செய்கின்றது.

    பருத்தி 2022-23-ம் ஆண்டில் 1.62 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.56 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், தர்மபுரி, அரியலூர், திருச்சி, விருதுநகர், மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பருத்தி அதிகளவு பயிரிடப்படுகின்றது.

    மாநிலத்தில் பருத்தி இறவை மற்றும் மானாவாரி விவசாய முறையில் பயிரிடப்படுகிறது. தென் மாவட்டங்களில் மானாவாரி விதைப்பு அக்டோபர் மாதம் வரை நீடிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கிடைத்த விலையின் அடிப்படையில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் இந்தியா முழுவதும் அதிக அளவில் பயிரிட்டனர்.

    அதிக மகசூல் தரக்கூடிய குறுகிய கால ரகங்களை தேர்வு செய்ததன் மூலம் அதிகபட்ச லாபம் ஈட்ட பருத்தி விவசாயிகள் முயன்றதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாட்டின் மேற்கு மண்டல மாநிலங்களில் பருத்தி சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. நல்ல விலையை எதிர்பார்த்து பருத்தி விவசாயிகள் வைத்திருந்த கையிருப்பு சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் உபரி வரத்து காரணமாக பருத்தி விலை மேலும் சரிந்தது. கடந்த ஆண்டில் (2022) உணரப்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக 10 லட்சம் பேல்கள் பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது போன்றவற்றால், நடப்பு பருவத்தில் பருத்தியின் விலை உயர வாய்ப்பில்லை. எனவே, கோடை கால பாசன பருத்தியை விவசாயிகள் உடனடியாக விற்கலாம்.

    இந்த சூழலில், விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 26 ஆண்டுகளாக சேலம் பகுதியில் நிலவிய விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    ஆய்வுகளின் அடிப்படையில், பருத்தியின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது குவிண்டாலுக்கு ரூ.6,500 முதல் ரூ.6,800 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் மானாவரி பருத்தியின் விதைப்பு முடிவுகளை எடுத்து கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

    • மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஹரிபிரசாத் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்.

    இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 24). இவர் வீட்டில் இருந்தபடி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஹரி பிரசாத்தின் குடும்பத்தில் கடன் அதிகமாக இருந்தது. ஆனால் வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    இதன் காரணமாக ஹரிபிரசாத் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணபட்டார்.

    சம்பவத்தன்று இவரது தந்தை வேலைக்கு சென்று இருந்தார். தாய் அருகே உள்ள மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஹரிபிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ஹரிபிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறியவும், அது தொடர்பான விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

    கோவை,

    தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது.

    இப்படி கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிற்கான பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணியானது இன்று முதல் தொடங்கியது. கணக்கெடுப்பின்போது ரெயில் நிலையம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி, குடிசை பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    தவிர, கட்டுமான பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, தொழிற்சாலை களில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.

    இந்த கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். கணக்கெ டுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட உடன் எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கணக்கெடுப்பு பணியின் போது, சிறப்பு கவனம் செலுத்தி தங்கள் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த குழந்தைகள் யாரேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அக்குழந்தைகளை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, வயதுக்கு ஏற்ற வகுப்பில் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது இன்று துவங்குகிறது.

    இப்பணியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

    எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கணக்கெடுப்பை மிகச்சரியாக எடுக்க வேண்டும். பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறியவும், அது தொடர்பான விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்பட்டால் அளிக்கப்படும். கணக்கெடுப்பின் தகவல்களை செல்போன் செயலில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களின் புகைப்படம் பதிவு செய்யப்படும் என்றார்.

    • ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது.
    • கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை வகித்தார். ஆணையாளர் அமுதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    வனிதா சஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க): கடந்த 6 மாதமாக நகர்மன்ற கூட்ட த்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. குறிப்பாக தெருவிளக்கு, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆணையாளர்: 10 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    விக்னேஸ் (பா.ஜக): நகராட்சி கூட்டம் 11 மணிக்கு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது. கூட்டத்தில் வைக்கப்பட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்ற தாமதமாகும். எனவே இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகளை மட்டுமே கேட்க வேண்டும். தனியாக ஒருநாள் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

    ஆணையாளர்: நேரம் இல்லாத காரணத்தினால் இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகள் மட்டுமே விவாதிக்கப்படும். தீர்மானங்கள் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் மற்றொரு நாள் நடத்தப்படும்.

    ராம்குமார் (திமுக): சத்ய சாய் நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இப்பகுதியில் உள்ள 18 தெருவிளக்குகளும் எரிவது இல்லை. செல்வபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கல்வெட்டுகள் இல்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்தில் உள்ளனர்.

    குருபிரசாத் (திமுக): தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி. இந்த கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    நகராட்சியில் கடந்த மாதங்களில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் 350க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுவரை எந்த வளர்ச்சி பணிகளும் நடக்க வில்லை. நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2.70 கோடி மதிப்பில் 27 வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு, உள்ளிட்டவை செய்து தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை.

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது. எனவே இதனை சிறப்பு பணி த்திட்டத்தின் கீழ் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற நடந்த வாக்கு வாதத்தின் போது 23-வது வார்டு உறுப்பினர் செண்பகம் (திமுக) மற்ற உறுப்பினர்களை பார்த்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

    இதனால் ஆவேசமடைந்த உறுப்பினர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்ற கூட்ட த்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஹரிதாஸ் (வயது23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இந்த நிலையில் ஹரிதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதன் காரணமாக சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து டாக்டர்கள் சூலூர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிதாஸ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஹரிதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும்
    • மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஏழை மக்கள் குடியிருப்பில் உள்ள பொது குழாய்களை அகற்றக்கூடாது, வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது போராட்டக்காரர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    • தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை, 

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் பொது நல சங்க தலைவர் தனுஷ்கோடி தலைமையில் ஊர் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    மலுமிச்சம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 1440 குடும்பங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்கிறோம். இங்கு தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    5 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் கட்டி தரப்பட வேண்டும். இங்கு உள்ள அரசு மினி கிளினிக் மூலம் குடியிருப்பு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    இது தொடர்பாக பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் மலுமிச்சம்பட்டி அடுக்குமாடி குடியிருப்போர் பொது நல சங்க செயலாளர் சுந்தரராஜன், இணை செயலாளர் ஷர்மிளா, மாநில தலித் சேனா தலைவர் உக்கடம் நாகேந்திரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மர்மநபர்கள் 3 பேர் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டனர்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் செல்போனை பறித்து விட்டு தப்பியோடினர்.

    கோவை, ஜூலை.31-

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன்(43). இவர் காந்திபுரம் கோகலே வீதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மகேந்திரன் கடையில் இருந்தார்

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மகேந்திரனிடம் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டனர்.

    அவர் முகவரி சொல்லிக்கொண்டிருந்த போது ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேந்திரனின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினார்.

    அவர் கொடுக்க மறுத்ததால் செல்போனை பிடுங்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டனை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன்(26), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி விவேக்(25), கோவை செங்காட்டை சேர்ந்த பரணிகுமார்(23) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது.
    • தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் அதிமுக கவுன்சிலர்கள் தட்டிக் கேட்போம்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள், கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணத்தை தனியாருக்கு அனுமதி அளித்த மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகரா ட்சியின் முந்தைய கூட்டத்தில் குப்பை அள்ளுவதற்கு தனியாருக்கு டெண்டர் விட அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் அந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த மாதமும் அந்த விவாதம் மீண்டும் சபைக்கு வருகிறது. மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு கட்டிய வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

    மேயருக்கு அதிகார வரம்பு என்னவென்று தெரியவில்லை. இந்த டெண்டருக்கு முன் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

    அவசர கோலத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் எத்தனை லட்சம்-கோடிகள் கைமாறியது என தெரியவில்லை.

    தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் நாங்கள் தட்டிக் கேட்போம். இதில் ஊழல் நடந்து உள்ளது. கண்டிப்பாக விசாரணை தேவை.

    கோவை மாநகராட்சி மேயர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் விரைவில் சோதனைக்கு வரும். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.கோவை மாநகராட்சியில் அத்தனை ரோடும் பழுதடைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×