search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மேயருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை-அ.தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
    X

    கோவை மேயருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை-அ.தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு

    • மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது.
    • தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் அதிமுக கவுன்சிலர்கள் தட்டிக் கேட்போம்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள், கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணத்தை தனியாருக்கு அனுமதி அளித்த மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகரா ட்சியின் முந்தைய கூட்டத்தில் குப்பை அள்ளுவதற்கு தனியாருக்கு டெண்டர் விட அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் அந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த மாதமும் அந்த விவாதம் மீண்டும் சபைக்கு வருகிறது. மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு கட்டிய வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

    மேயருக்கு அதிகார வரம்பு என்னவென்று தெரியவில்லை. இந்த டெண்டருக்கு முன் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

    அவசர கோலத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் எத்தனை லட்சம்-கோடிகள் கைமாறியது என தெரியவில்லை.

    தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் நாங்கள் தட்டிக் கேட்போம். இதில் ஊழல் நடந்து உள்ளது. கண்டிப்பாக விசாரணை தேவை.

    கோவை மாநகராட்சி மேயர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் விரைவில் சோதனைக்கு வரும். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.கோவை மாநகராட்சியில் அத்தனை ரோடும் பழுதடைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×