search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
    X

    கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

    • பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறியவும், அது தொடர்பான விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

    கோவை,

    தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது.

    இப்படி கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிற்கான பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணியானது இன்று முதல் தொடங்கியது. கணக்கெடுப்பின்போது ரெயில் நிலையம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி, குடிசை பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    தவிர, கட்டுமான பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, தொழிற்சாலை களில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.

    இந்த கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். கணக்கெ டுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட உடன் எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கணக்கெடுப்பு பணியின் போது, சிறப்பு கவனம் செலுத்தி தங்கள் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த குழந்தைகள் யாரேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அக்குழந்தைகளை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, வயதுக்கு ஏற்ற வகுப்பில் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது இன்று துவங்குகிறது.

    இப்பணியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

    எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கணக்கெடுப்பை மிகச்சரியாக எடுக்க வேண்டும். பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறியவும், அது தொடர்பான விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்பட்டால் அளிக்கப்படும். கணக்கெடுப்பின் தகவல்களை செல்போன் செயலில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களின் புகைப்படம் பதிவு செய்யப்படும் என்றார்.

    Next Story
    ×