என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • உச்சாணிக்கொம்பில் இருந்து அதலபாளத்துக்கு சரிந்தது
    • மத்திய-மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து உரிய விலை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

    மேட்டுப்பாளையம், 

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, கெம்மராம்பாளையம், தோலம்பாளையம், மருதூர், பெள்ளாதி, ஓடந்துறை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அங்கு உள்ள வி வசாயிகள் கறிவேப்பிலை, கத்தரி, தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

    இங்கு விளையும் பொருட்களை விவசாயிகள் மேட்டுப்பாளையம், காரமடை காய்கறி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் குடும்பத்த லைவிகள் மிகுந்த கவலை க்கு ஆளாகினர். அந்தளவுக்கு தக்காளியின் விலை அப்போது உச்சா ணிக்கொம்பில் இருந்தது.ஆனால் இன்றைக்கு அதே தக்காளியின் விலை தற்போது அதலபாளத்துக்கு சரிந்து உள்ளது. மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தேக்கம்ப ட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னராஜ் என்பவர் கூறு கையில், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டா ரப்பகுதிகளில் விலை அதிக மாக விற்றதன் காரணமாக, நாங்கள் அதிக பரப்பளவில் தக்காளி பயிரிட்டோம். இதனால் தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.250-க்கு விற்பனையான தக்காளி, தற்போது ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது 25-27 கிலோ டிப்பர் ஒன்றின் விலை அதிகபட்சமாக ரூ.400 வரை மட்டுமே விற்பனையாகிறது.

    மேட்டுப்பாளையம் பகுதியில் ஏற்கனவே வேலையாட்கள் கூலி, உரம், நடவு கூலி அதிகரித்து உள்ளது. எனவே தக்காளி சாகுபடியில் சொற்பமான தொகையே வருவாயாக கிடைத்து வந்தது. இந்த நிலையில் தக்காளியின் விலைவீழ்ச்சி எங்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    தோட்டத்தில் பறித்த தக்காளியை இருப்பு வைத்து விற்கவும் முடியாது. மேலும் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் தக்காளி விரைவில் அழுகி விடும். எனவே கிடைக்கின்ற விலைக்கு விற்று வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து, அதற்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    • தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் வியூகம்
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை

    கோவை, 

    மக்கள் நீதி மையம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே நடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றையும் கமல்ஹாசன் தனித்தே சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனி வாசனிடம் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    இப்படி கட்சி தொடங்கிய பிறகு தனித்தே களம் கண்ட மக்கள் நீதி மையம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர் தலில் கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்து உள்ளது. இதற்கு அச்சார மாக ஈரோடு இடைத்தேர்த லில் கமல்ஹாசன் காங்கிர சுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கி ரஸ் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க கமல் திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வியூகம் அமைத்து செயல்பட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

    இதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தக வல்கள் வெளியாகி இருக் கின்றன. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து ள்ளார். பாராளு மன்ற தேர்தலில் கோவை, தென்சென்னை, மதுரை ஆகிய 3 தொகுதிகளிலும் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டு வரு வதாக தகவல்கள் வெளி யாகி இருக்கின்றன. பாராளு மன்ற தேர்தலில் தென் சென்னை அல்லது கோவை தொகுதியில் கமல் போட்டி யிடுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹா சன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை முழுமையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வெற்றியை ருசிக்க வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது சட்ட மன்ற தேர்தலில் குறை வான ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது கட்சி யினர் மத்தியில் இப்போதும் வருத்தமான விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்காக பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியை அனைத்து தரப்பி னரிடமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம் என்றார். இதன் மூலம் கூட்டணி அரசியலில் நிச்ச யம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டி ருப்பதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    • பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ வழிவகை செய்யப்பட்டது
    • 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு

    கோவை, 

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

    சுமூக தீர்வு காணப்படுவதால் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான விஜயா இதனை தொடங்கிவைத்து, மோட்டார் வாகன விபத்தில் கணவரை இழந்த சுகன்யா, அவரது குடும்ப த்தினருக்கு இழப்பீ ட்டு தொகையாக ரூ.32 லட்சத்தை வழங்கினார்.

    இதேபோல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர், மதுக்கரை நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதன்மூலம் 3032 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, முறையீட்டாளர்களுக்கு ரூ.35.39 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முரளிதரன், கோவிந்த ராஜ், சுந்தரம், ரவி, சார்பு நீதிபதிகள் நம்பிராஜன், சிவகுமார், மோகனம்பாள், மோகனரம்யா, ஹரிஹரன், உரிமையியல் நீதிபதி தேவராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 16 அமர்வுகள் மூலம் மாவட்ட தலைநகரிலும், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் சஞ்சீவி பாஸ்கர், கே.அருணாசலம், சார்பு நீதிபதிகள் கங்காராஜ், மோகனவள்ளி, கவுதமன், வேதகிரி, கலைவாணி, உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 25 அமர்வுகள் மூலம் தாலுகா அளவிலும் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார்.

    சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள், சிவில் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் கோவையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும், பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

    இதேபோல், வழக்கு களை மாற்றுமுறையில் தீர்வு காணவும், இலவச சட்ட உதவி பெறவும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா குற்றவாளியை காட்டி கொடுத்தது
    • வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்

    கோவை, 

    கோவை அருகே உள்ள அன்னூரை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 34). இவர் குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் காசாளரான ஆனந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் இவர் நிறுவனத்தில் வரவு, செலவுகளை பார்த்து வீட்டு மீதி இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கபோர்டில் வைத்து விட்டு சென்றார்.

    நள்ளிரவு நிறுவனத்தில் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் யாரோ கபோர்டில் இருந்த பணத்தை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் நிறுவனத்தை திறக்க வந்த எலக்ட்ரிசீயன், ஷட்டர் உடைக்கப்பட்டு கபோர்டில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து நிறுவன மேலாளர் மோகன பிரியாவிற்கு தகவல் தெரிவித்தார்.அவர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதே நிறுவனத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு காவலாளியாக வேலைக்கு சேர்ந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் (28) என்பவர் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை தேடி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று கர்ப்பமாக்கினார்
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

    கோவை, 

    கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அய்யாசாமி (வயது 31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் அய்யாசாமி மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் தொடர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து அவர் லாரி டிரைவரிடம் கூறினார்.

    இதனையடுத்து அய்யாசாமி கடந்த மாதம் 30-ந் தேதி மாணவியை திருமணம் செய்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அய்யாசாமியின் வீட்டிற்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் லாரி டிரைவர் அய்யாசாமி 16 வயது மாணவியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர்கள் செட்டிப்பா ளையம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 16 வயது மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் அய்யா சாமியை தேடி வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் திருமணம்
    • காதலர்களின் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 25). என்ஜினீயர். இவர் நண்பர்களிடம் கான்பரன்ஸ் மூலமாக பேசும் போது தேனியை சேர்ந்த தர்ஷினி பிரியா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர்கள் 2 பேரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி தர்ஷினி பிரியா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை தேடி வால்பாறைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வால்பாறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனடியாக போலீசார் காதலர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் தவிப்பதால் நடவடிக்கை
    • ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதியாகிறது

    கோவை, 

    கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மாநகரில் நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ரூ.250 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி சந்திப்பில் அவ்வப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் 1.14 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும். அக்டோபர் மாதம் மேம்பாலப் பணிகளைத் தொடங்கிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி லிப்ட் கேட்டு கைவரிசை
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரோஸ்மிக்காந்த் (வயது 34). இவர் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தில் அறை எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ரோஸ்மிக்காந்த் தென்னம்பாளையம் பிரிவில் உள்ள நண்பர் அறைக்கு சென்று மது குடித்தார். பின்னர் அவரது அறைக்கு செல்வதற்காக தென்னம்பாளையம் பிரிவில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி லிப்ட் கேட்டார். அவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ரோஸ்மிக் காந்தை ஏற்றிச் சென்றார். ஆனால் அந்த வாலிபர் ரோஸ்மிக் காந்த் சொன்ன இடத்தில் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இறங்க முயன்றார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரோஸ்மிக் காந்தை மிரட்டி கத்தியை எடுத்து தலை, நெற்றி, மூக்கு, கன்னம் ஆகிய இடங்களில் குத்தினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் ரோஸ்மிக்காந்திடம் ரூ.700 பணத்துடன் இருந்த மணிபர்சை பறித்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்தி விட்டு பணத்தை பறித்து சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • போதை தலைக்கேறிய நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 75). இவரது மனைவி தெய்வானை (65). இவர்களுக்கு மணிகண்டன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி செல்வபுரத்தில் வசித்து வருகிறார்.

    தெய்வானை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். மேலும் சில ஆடுகளை வைத்தும் மேய்த்து வருகிறார். லோகநாதன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கணவன்-மனைவி இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் தினமும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 3 மணி அளவில் இவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது லோகநாதன் அவரது மனைவியை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த தெய்வானை அங்கு இருந்த உருட்டுக்கட்டையால் லோகநாதனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து அங்கேயே உயிரிழந்தார்.

    மதுபோதையில் இருந்த தெய்வானை, தனது கணவரை கொன்றுவிட்டதாக புலம்பியபடி இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அங்கு லோகநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். அப்போது தெய்வானை, தன்னை கணவர் தாக்கியதால் உருட்டு கட்டையால் அவரை அடித்து கொலை செய்ததாக தெரிவித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி தெய்வானை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

    • அரசியல்வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று தீய நோக்கத்துடன், வீரலட்சுமியுடன் கூட்டுசேர்ந்து சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு
    • விஜயலட்சுமி மற்றும் அவரை தூண்டிவிடும் வீரலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

     கோவை,

    கோவை மண்டல நாம் தமிழர் கட்சி செயலா ளர் அப்துல் வகாப் தலை மையில் நிர்வாகிகள் மாந கர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    எங்கள் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவரது அரசியல்வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று தீய நோக்கத்துடனும் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருடன் வீரலட்சுமி என்பவரும் கூட்டுசேர்ந்து சதி திட்டம் தீட்டி பொய்யாக அவதூறு குற்றச்சாட்டினை 15 ஆண்டுகளுக்கு பிறகு பணம் பறிக்க வேண்டும், நாம் தமிழர் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்து உள்ளனர்.

    பின்னர் அவர்கள் இரு மதத்தினர் மற்றும் பிரிவினர் இடையே பகை உணர்வை தூண்டும் விதமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் பேசி உள்ளனர். எனவே நடிகை விஜயலட்சுமி மற்றும் அவரை தூண்டிவிடும் வீரலட்சுமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுப்பணி நடக்கிறது
    • பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டனர்

    பேரூர்,

    பேரூர் பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து தலைவர், செயல் அலுவலர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட முதல் வார்டில் அதிமூர்க்கம்மன் கோவில் முதல் திருவாவாடுதுறை ஆதீனத் தோட்டம் வரை, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், நடந்து வரும் இப்பணிகளை பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது வார்டு கவுன்சிலர் சங்கீதா தாமரைச்செல்வன், அலுவலக பணியாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றியதாக போலீசில் புகார்
    • கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குங்குமப்பிரகாசை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு இவரது நண்பர் மூலம் ஆனைமலையைச் சேர்ந்த குங்கும பிரகாஷ் ( 34) என்பவர் அறிமுகம் ஆனார். இவரிடம் சிவக்குமார் கார் வாங்க வேண்டும் என்றார். அப்போது குங்கும பிரகாஷ், சிவகுமாரிடம் தன்னிடம் 2 கார்கள் விற்பனைக்கு உள்ளது.

    ரூ.14 லட்சம் பணம் கொடுத்தால் காரை தருவதாக கூறினார். இதனை உண்மை என நம்பிய சிவகுமார் ரூ. 14 லட்சம் பணத்தை குங்கும பிரகாசிடம் கொடுத்து காரை வாங்கினார்.

    இந்த நிலையில் தனியார் கார் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் சிவகுமாரின் வீட்டிற்கு சென்றனர் பின்னர் அவர்கள் காரை பறிமுதல் செய்தனர். அப்போது சிவகுமாரிடம் விசாரித்தனர்.

    அவர் குங்கும பிரகாசிடம் ரூ.14 லட்சம் பணத்துக்கு காரை வாங்கியதாக கூறினார் ஆனால் குங்கும பிரகாஷ் வாடகை காரை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார் புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து குங்குமப்பிரகாசை தேடி வருகின்றனர். 

    ×