என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவில் வாடகை கார்களை ரூ.14 லட்சத்துக்கு  ஏமாற்றி விற்பனை
    X

    கிணத்துக்கடவில் வாடகை கார்களை ரூ.14 லட்சத்துக்கு ஏமாற்றி விற்பனை

    • ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றியதாக போலீசில் புகார்
    • கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குங்குமப்பிரகாசை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு இவரது நண்பர் மூலம் ஆனைமலையைச் சேர்ந்த குங்கும பிரகாஷ் ( 34) என்பவர் அறிமுகம் ஆனார். இவரிடம் சிவக்குமார் கார் வாங்க வேண்டும் என்றார். அப்போது குங்கும பிரகாஷ், சிவகுமாரிடம் தன்னிடம் 2 கார்கள் விற்பனைக்கு உள்ளது.

    ரூ.14 லட்சம் பணம் கொடுத்தால் காரை தருவதாக கூறினார். இதனை உண்மை என நம்பிய சிவகுமார் ரூ. 14 லட்சம் பணத்தை குங்கும பிரகாசிடம் கொடுத்து காரை வாங்கினார்.

    இந்த நிலையில் தனியார் கார் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் சிவகுமாரின் வீட்டிற்கு சென்றனர் பின்னர் அவர்கள் காரை பறிமுதல் செய்தனர். அப்போது சிவகுமாரிடம் விசாரித்தனர்.

    அவர் குங்கும பிரகாசிடம் ரூ.14 லட்சம் பணத்துக்கு காரை வாங்கியதாக கூறினார் ஆனால் குங்கும பிரகாஷ் வாடகை காரை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார் புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து குங்குமப்பிரகாசை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×