என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரூர் பேரூராட்சியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு
- ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுப்பணி நடக்கிறது
- பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டனர்
பேரூர்,
பேரூர் பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து தலைவர், செயல் அலுவலர் நேரில் ஆய்வு செய்தனர்.
பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட முதல் வார்டில் அதிமூர்க்கம்மன் கோவில் முதல் திருவாவாடுதுறை ஆதீனத் தோட்டம் வரை, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், நடந்து வரும் இப்பணிகளை பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வார்டு கவுன்சிலர் சங்கீதா தாமரைச்செல்வன், அலுவலக பணியாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






