என் மலர்
கோயம்புத்தூர்
- பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
- பள்ளி வளாகத்திற்குள் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் வேதனை
கோவை,
கோவை க.கா சாவடி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்து உள்ள மனுவில், எங்கள் பள்ளி ஆரம்ப பள்ளியாக இருந்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
ஆனால் தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு தற்போதுவரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
பின்னர் மாணவ-மாணவிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் தமிழ்-ஆங்கில வழி என 2 பிரிவுகளும் ஒரே வகுப்பறையில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பொதுக்கழிவறையை உபயோகப்படுத்த வேண்டி உள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும் அங்குள்ள வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானங்களும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே தற்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்து உள்ளோம்.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குடிபோதையில் தகராறு செய்ததால் கார்த்திக் ஆத்திரம்
- கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கைக்கோலபாளையத்தில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஓட்டலில் காரைக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வேலை செய்து கொண்டு இருந்த போது பாலன் வீதியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 30) என்பவர் மது போதையில் ஓட்டலுக்கு சென்றார்.
அப்போது அவர் அங்கு இருந்த மாஸ்டர் கார்த்திக்கிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் கையில் இருந்த சமையல் கரண்டியால் சந்ேதாஷ்குமாரின் கழுத்தில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூர் ஜெகநாதன் லே-அவுட்டை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்வராணி (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
செல்வராணிக்கு கர்ப்பபையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை ஆபரேசன் செய்து அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து செல்வராணி திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து கர்ப்பபையை அகற்றினர். பின்னர் வீட்டிற்கு திரும்பினார். நேற்று வீட்டில் இருந்த செல்வ ராணிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக செல்வராணியை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொன்னேகவுண்டன்புதூர்-கரியாம்பாளையம் ரோட்டில் கார் மோதியது.
- அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கவுதம் (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி யில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறையில் வீட்டில் இருந்த கவுதம் தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள அவரது நண்பரான ஹாரூன் (23) என்பவரது வீட்டிற்கு செல்வதாக தனது தாயிடம் கூறி விட்டு சென்றார்.
பின்னர் கவுதம் அவரது நண்பரான ஹாரூனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பொன்னேகவுண்டன் புதூர்-கரியாம்பாளையம் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அன்னூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணத்துக்கு எதிர்ப்ப தெரிவித்தால் வீட்டை விட்டு வெளியேறினார்
- காதல் ஜோடி பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கு அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இந்துமதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இந்துமதியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க அவரசமாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதனையடுத்து இந்துமதி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றார்.
2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்மநபர் கைவரிசை
- நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில்ரூ.34,700 பணம் கொள்ளை
கோவை,
கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள பகவான் கார்டனை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் குடியேறினார்.
சம்பவத்தன்று கோகுல கிருஷ்ணன் வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் மனைவியுடன் படுத்து தூங்கினார். அப்போது காற்றுக்காக மாடியில் உள்ள ஜன்னல் மற்றும் கதவை பூட்டாமல் தூங்கினார். நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் யாரோ அறையில் இருந்த பீரோ திறந்தனர். பின்னர் அதில் இருந்த ஆரம், நெக்லஸ், செயின், ேதாடு உள்பட 10 அரை பவுன் தங்க நகைகள் வெள்ளி கொலுசு, ரூ.700 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
பின்னர் கொள்ளையர்கள் எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவரின் வீட்டு கதவை உடைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்குள் செல்ல முடியாததால் அவர் சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்த கோகுலகிருஷ்ணன் வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 அரை பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (48). இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவர்களது நிறுவனத்தில் சிவா, பிரபாகரன், கார்த்திக், சோலைமலை ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை சுப்பிரமணி அவரது வீட்டின் அருகே உள்ள வாடகை வீட்டில் குடிய மர்த்தி உள்ளார். சம்பவத்தன்று இவர்களது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.34,700 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சுப்பிரமணி சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
- மதன்குமார் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன
- டீக்கடையில் இருந்த ரூ.48,567 பணத்துடன் மாயமான திரிபுரா வாலிபர்
கோவை,
கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று கெம்பட்டி காலனி ரோட்டில் உள்ள பேக்கரி யில் டீ குடித்து கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சட்டைப்பையில் இருந்து ரூ.700 பறித்து தப்பி செல்ல முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் கூச்சல் போடவே, அக்கம்ப க்கத்தினர் திரண்டு வந்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் செந்தில்குமாரிடம் பணம் பறித்தது உக்கடம், சிஎம்சி காலனியை சேர்ந்த மதன்குமார்(34) என்பது தெரியவந்தது. இவர் தற்போது மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார். மதன்குமார் மீது ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடைவீதி போலீசார் கைது செய்து கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் அமர்நாத் (39) என்பவர் காபி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் திரிபுரா மாநிலம், அகர்தலாவை சேர்ந்த பிரிதம்தேய் (27) என்பவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அமர்நாத் சம்பவத்தன்று கல்லாவில் ரூ. 48,567 பணம் வைத்து விட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது பிரிதம்தேய்யை காணவி ல்லை. கல்லாவில் இருந்த ரூ. 48,567 ரொக்க பணமும் மாயமாகி இருந்தது.
அமர்நாத் கடையில் இல்லாத நேரத்தை பயன்ப டுத்தி அந்த வாலிபர் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அமர்நாத் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் தப்பி ஓடிய பிரிதம் தேய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பிரேம் என்பவரையும் தேடி வருகின்றனர்.
- குடும்பத்துடன் சினிமாவுக்கு சென்று திரும்பிய போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சரவணம்பட்டியிலும் சித்ரா என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
கோவை,
கோவை அடுத்த தொப்பம்பட்டி டி.ஜி.கே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34), ஐடி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமாவுக்கு சென்றார். அப்போது யாரோ மர்மநபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நெக்லஸ், ஆரம், கைச்செயின் உள்பட 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீதர் வீடு திரும்பியபோது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. ஸ்ரீதர் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை திருடி சென்று உள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீதர், துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.
கோவை கணபதி, காந்திமாநகரை சேர்ந்த தங்கவேல் மனைவி சித்ரா (51). இவர் சங்கனூரில் உள்ள பாட்டில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சித்ரா சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியபோது முன்கதவு உடைந்து கிடப்பதும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மாயமானதும் தெரிய வந்தது. சித்ரா வேலைக்கு சென்றபிறகு யாரோ மர்மநபர் வீடு புகுந்து திருடி சென்றது தெரிய வந்தது.
சரவணம்பட்டி போலீசில் சித்ரா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து தங்கநகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 16, 30, அக்டோபா் 21, 23 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.
கோவை:
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மலைமுகடுகள், குகைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை கடந்து செல்கிறது.
எனவே நீலகிரி மலை ரெயிலில் பயணித்து அங்கு நிலவும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக, தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, 23-ந்தேதி ஆயுதபூஜை ஆகிய விடுமுறை தினங்கள் வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயிலை கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி சிறப்பு மலைரெயில் இயக்கப்பட உள்ளது.
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செப்டம்பா் 16, 17, 30, அக்டோபா் 1 ஆகிய 4 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து செப்டம்பா் 17, 18, அக்டோபா் 1, 2 ஆகிய நாட்களில் ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணி அளவில் இந்த ரெயில் குன்னூரை வந்தடையும்.
இதேபோல குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.40 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 16, 30, அக்டோபா் 21, 23 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.
ஊட்டியில் இருந்து கேத்தி வரை செப்டம்பா் 17, அக்டோபா் 1 ஆகிய இரு நாட்கள் மலை ரெயில் இயக்கப்படுகிறது.
- சுண்ணாம்பு காலவாயை சேர்ந்த பைசல் ரகுமான் சிக்கினார்
- இவர் மீது ஏற்கனவே போதை மாத்திரை, கஞ்சா பதுக்கிய வழக்குகள் உள்ளது
கோவை,
கோவை கரும்புக்கடை சேரன் நகரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி அருகே சிலர் போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்றனர். அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரையை பதுக்கி வைத்து விற்பனை செய்த சுண்ணாம்பு காலவாயை சேர்ந்த பைசல் என்ற பைசல் ரகுமான் (வயது 26) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்த வழக்குகள் உள்ளது.
பைசலிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் 120 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் குனியமுத்தூர் போலீசார் கைது செய்யப்பட்ட பைசலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சொத்துக்களை அபகரிப்பதற்காக மெக்கானிக் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
- ஆசிரியையை மிரட்டியவர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரிய நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜன். இவரது மனைவி அம்பிகாபதி (வயது 50).
இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறி யிருப்பதாவது:-
நான் சிக்கலாம்பா ளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்தநி லையில் எனது மாமனார் ஐசக் அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தினை அவரது மனைவி பெயருக்கு எழுதி கொடுத்தார். இதனை எனது மாமியார் என் கணவரின் பெயருக்கு மாற்றினார். எனது கணவர் இறந்த பின்னர் இந்ந சொத்தினை நான் அனுபவித்து வருகிறேன்.
இந்தநிலையில் எனது மாமனாரின் முதல் மனைவியின் மகன் ஜோசப் என்பவரது மகன் சொலவம்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக் சாலமோன் ஜான்சன் (43) என்பவர் எனது கணவரின் சொத்தை அபகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அவர் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். மேலும் எனது செல்போனுக்கு வாய்ஸ் ரெக்காடர் மூலமாக இழிவு படுத்தும் தகாத வார்த்தைகளை பேசி அனுப்புகிறார்.
கடந்த ஜூலை மாதம் சாலமன் ஜான்சன் எனக்கு சொந்தமான கட்டடித்தில் வாடகைக்கு இருப்பவர்களை மிரட்டி காலி செய்யுபடி மிரட்டி உள்ளார். பின்னர் கடைக்கு தீ வைத்து சேதத்தை ஏற்படுத்தினார். இது குறித்து கடையில் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.சம்பவத்தன்று நான் பள்ளியில் இருந்த போது அங்கு சாலமன் ஜான்சன் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். பின்னர் அவர் உனது கடையை எரித்த எனக்கு உன்னை எரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கூறி பெட்ரோல் கேனை காட்டி எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
மேலும் அந்த சொத்தை உன்னை அனுபவிக்க விடமாட்டேன். உன்னை இல்லாமல் பண்ணிருவேன் என மிரட்டி அச்சுறுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ஆசிரியையை மிரட்டிய சாலமன் ஜான்சன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த டயானா கிறிஸ்டி என்பவர் சிக்கினார்
- நகை, பணம் திருட்டில் ஈடுபட்டது சி.சி.டி.வி மூலம் கண்டறியப்பட்டது
கோவை,
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நகை கடை வைத்திருப்பவர் விஜயகுமார் (வயது 67). இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தார்.
அப்போது ஒரு இளம்பெண் தங்கநகை வாங்குவதற்காக வந்திருந்தார். நகை கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி கொண்டு அந்த இளம்பெண் நகைக்கடையில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கப்ப ணத்தை நைசாக திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.இதுதொடர்பா க காட்டூர் போ லீசார் வழக்கு ப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி காட்சிப்பதி வுகளை ஆய்வு செய்தனர். இதில் இளம்பெண் தங்கநகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசார ணையில் திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த டயானா கிறிஸ்டி (25) நகை, பணம் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நகைக்கடை க்குள் புகுந்து 3 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.75 ஆயிரம் திருடியதாக, போலீசார் டயானா கிறிஸ்டி யை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் தங்கராஜ் (65), இவர் ஒரு தனியார் கல்லூரியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.
அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 65 இன்ச் டிவி, விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆகியவை மாயமானது தெரியவந்தது.
தங்கராஜ் வீட்டுக்கதவை திறந்து வைத்திருந்ததால், மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து மேற்கண்ட பொருட்களை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






