search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் கேனுடன் வந்து எரித்து கொல்வதாக ஆசிரியைக்கு மிரட்டல்
    X

    பெட்ரோல் கேனுடன் வந்து எரித்து கொல்வதாக ஆசிரியைக்கு மிரட்டல்

    • சொத்துக்களை அபகரிப்பதற்காக மெக்கானிக் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
    • ஆசிரியையை மிரட்டியவர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரிய நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜன். இவரது மனைவி அம்பிகாபதி (வயது 50).

    இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறி யிருப்பதாவது:-

    நான் சிக்கலாம்பா ளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்தநி லையில் எனது மாமனார் ஐசக் அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தினை அவரது மனைவி பெயருக்கு எழுதி கொடுத்தார். இதனை எனது மாமியார் என் கணவரின் பெயருக்கு மாற்றினார். எனது கணவர் இறந்த பின்னர் இந்ந சொத்தினை நான் அனுபவித்து வருகிறேன்.

    இந்தநிலையில் எனது மாமனாரின் முதல் மனைவியின் மகன் ஜோசப் என்பவரது மகன் சொலவம்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக் சாலமோன் ஜான்சன் (43) என்பவர் எனது கணவரின் சொத்தை அபகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் அவர் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். மேலும் எனது செல்போனுக்கு வாய்ஸ் ரெக்காடர் மூலமாக இழிவு படுத்தும் தகாத வார்த்தைகளை பேசி அனுப்புகிறார்.

    கடந்த ஜூலை மாதம் சாலமன் ஜான்சன் எனக்கு சொந்தமான கட்டடித்தில் வாடகைக்கு இருப்பவர்களை மிரட்டி காலி செய்யுபடி மிரட்டி உள்ளார். பின்னர் கடைக்கு தீ வைத்து சேதத்தை ஏற்படுத்தினார். இது குறித்து கடையில் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.சம்பவத்தன்று நான் பள்ளியில் இருந்த போது அங்கு சாலமன் ஜான்சன் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். பின்னர் அவர் உனது கடையை எரித்த எனக்கு உன்னை எரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கூறி பெட்ரோல் கேனை காட்டி எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    மேலும் அந்த சொத்தை உன்னை அனுபவிக்க விடமாட்டேன். உன்னை இல்லாமல் பண்ணிருவேன் என மிரட்டி அச்சுறுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ஆசிரியையை மிரட்டிய சாலமன் ஜான்சன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×