search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
    X

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 16, 30, அக்டோபா் 21, 23 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.

    கோவை:

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மலைமுகடுகள், குகைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை கடந்து செல்கிறது.

    எனவே நீலகிரி மலை ரெயிலில் பயணித்து அங்கு நிலவும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக, தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, 23-ந்தேதி ஆயுதபூஜை ஆகிய விடுமுறை தினங்கள் வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயிலை கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி சிறப்பு மலைரெயில் இயக்கப்பட உள்ளது.

    ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செப்டம்பா் 16, 17, 30, அக்டோபா் 1 ஆகிய 4 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    குன்னூரில் இருந்து செப்டம்பா் 17, 18, அக்டோபா் 1, 2 ஆகிய நாட்களில் ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணி அளவில் இந்த ரெயில் குன்னூரை வந்தடையும்.

    இதேபோல குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.40 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 16, 30, அக்டோபா் 21, 23 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.

    ஊட்டியில் இருந்து கேத்தி வரை செப்டம்பா் 17, அக்டோபா் 1 ஆகிய இரு நாட்கள் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    Next Story
    ×