என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுத்தில் குத்து"

    • குடிபோதையில் தகராறு செய்ததால் கார்த்திக் ஆத்திரம்
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை, 

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கைக்கோலபாளையத்தில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஓட்டலில் காரைக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வேலை செய்து கொண்டு இருந்த போது பாலன் வீதியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 30) என்பவர் மது போதையில் ஓட்டலுக்கு சென்றார்.

    அப்போது அவர் அங்கு இருந்த மாஸ்டர் கார்த்திக்கிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் கையில் இருந்த சமையல் கரண்டியால் சந்ேதாஷ்குமாரின் கழுத்தில் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×