என் மலர்
கோயம்புத்தூர்
- மது குடித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் வெட்டி வீழ்த்தினர்
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மான் என்ற ராஜ்குமார் (வயது 32). இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பிரபல ரவுடியான மான் என்ற ராஜ்குமார் மீது ஏற்கனவே அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த இவர் கடந்த மாதம் 14-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
ரவுடி ராஜ்குமார் அவரது நண்பர்களான மண்டேலா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோ செந்தில் என்ற பால்கார செந்தில் (42) , எஸ்.எம். நகரை சேர்ந்த பெயிண்டர் கண்ணபிரான் (27) ஆகியோருடன் பாரதி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். மது குடித்து கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ரவுடி ராஜ்குமார் மணிநகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஆட்டோ செந்தில், கண்ண பிரான் ஆகியோர் சென்றனர். அவர் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ராஜ்குமாரின் தலை, கழுத்து மற்றும் உடலில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ராஜ்குமாருக்கு நெற்றி, வலது மற்றும் இடது கை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் ராஜ்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியை வெட்டி விட்டு தலைமறைவாக இருந்த ஆட்டோ செந்தில், கண்ணபிரான் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 8 ஆண்டுகளின் முடிவில் அன்றைய மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம்
- ரிசர்வ் வங்கி மூலம் 2.5 சதவீதம் வட்டியுடன் 6 மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் செலுத்தப்படும்
கோவை,
கோவை அஞ்சல் கோட்டம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்குகிறது.
இந்திய அஞ்சல் துறை, ரிசர்வ் வங்கி உடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்க பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான விற்பனை கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 15-ந் தேதி வரை விற்பனை நடக்கிறது. 1 கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.5923.இதன் மூலம் ஒருவர் தம் வாழ்நாளில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.
தங்க பத்திரத்தின் முதலீட்டு காலமான 8 ஆண்டுகளின் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருவாய் ஆகும்.
தங்க பத்திரம் பெறுவதற்கு, முதலீட்டாளரின் விபரங்களை தங்க பத்திர விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அத்துடன் ஆதார் நகல், பான் கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கின் விவரங்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்க பத்திரத்தை பெற்று கொள்ளலாம். பதிவு செய்த 15 நாட்களில் தங்க பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதின் மூலம் செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கத்தை சேமிக்கலாம்.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ரெயில் பயணத்தில் காதல் மலர்ந்தது
- பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிறிஸ்டியன் காலனியை சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் கோவை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
தினசரி விவேக் ரெயில் மூலமாக வேலைக்கு வந்து சென்றார். ரெயில் பய ணத்தில் போது இவருக்கு காரமடை வெள்ளியங் காட்டை சேர்ந்த ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அர்ச்சன பிரியா (22) என்பவரும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் கடந்த 7 மாதங்களாக 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் விவேக்கின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணப்பெண்ணை தேடி வந்தனர்.
இதனையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காதலர்கள் சிறுமு கையில் உள்ள ஒரு கோவி லில் வைத்து திருமணம் செய்தனர்.
திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும்
- அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெகநாதன் திடீரென சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன நடந்தது என கேட்டனர். அதற்குள் அவர் மயங்கி னார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஜெயநாதனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் ஜெகநாதனை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சென்றனர்.
ஆனால் மாணவர் மயக்கமாக இருப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக ஜெகநாதன் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- தண்ணீர் வாளியில் குழந்தை மூழ்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி சாவு
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள பழனியப்பா தேவர் வீதியை சேர்ந்தவர் பாலகுமாரன். கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று இருந்தார்.
வீட்டில் பாலகு மாரனின் மனைவி மற்றும் 1 வயது மகளான அனுஸ்ரீ ஆகியோர் இருந்தனர். மதியம் 1 மணி அளவில் பாலகுமாரனின் மனைவி குளிப்பதற்காக சென்றார். அப்போது பெண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. குளித்து விட்டு வந்து பார்த்த போது வீட்டில் தண்ணீருடன் வைக்கப்பட்டு இருந்த வாளியில் குழந்தை மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது.
இதனை பார்த்து குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்தார். பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பாலகுமாரன், என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அவரது மனைவி நடந்த சம்பவத்தை கூறினார்.
உடனடியாக 2 பேரும் குழந்தையை சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈச்சனாரியில் வருகிற 15-ந்தேதி அமைச்சர் முத்துசாமி வழங்குகிறார்
- கோவையில் 2.81 லட்சம் விண்ணப்பங்கள் நேரடியாக களஆய்வு
கோவை,
கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முதல்- அமைச்சர், சிறப்பு திட்டமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறி வித்தார். இந்த திட்டத்தை வருகிற 15-ந் தேதி அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடந்த முதல் கட்ட முகாம், 2-வது கட்ட முகாம் மற்றும் சிறப்பு முகாம்கள் ஆகிய வற்றின் மூலம் 7,41,799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,81,942 விண்ணப்பங்கள் களஆய்வு மேற்கொள்ள வரப்பெற்றது.
தற்போது வரை வரு வாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, மற்றும் தோட்டக்கலைத்துறை, உள்ளிட வேளாண்மைத் துறை ்ட துறை அலுவலர்கள் மற்றும் நியாயவிலைகடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 15-ந் தேதி கோவை மாவட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு பணிகள், வாகன நிறுத்துமிடங்கள், வாகன போக்குவரத்து போன்ற பணிகளை போலீஸ் துறையினால் மேற்கொள்ளவேண்டும்.
மேலும் பயிற்சி பெற்ற டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியா ளர்கள் அடங்கிய மருத்துவ குழு ஆம்புலன்சு வசதியுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மோ.ஷர்மிளா. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) கோகிலா, வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித் துணை கலெக்டர்கள் சமூக பாதுகாப்புத் திட்டம் சுரேஷ், குணசேகரன், மற்றும் துறை மாவட்ட சார்ந்த அரசு வழங்கல் அலுவலர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூபே கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
- நித்தீஷ்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 22). இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் வழக்கு உள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நித்தீஷ்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவர் தினமும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி நித்தீஷ்குமார் இன்று காலை கையெழுத்து போடுவதற்காக, கோவை மகளிர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ரஞ்சித், கார்த்திக் ஆகிய 2 பேர் பாதுகாவலாக வந்திருந்தனர்.
கோவை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டபிறகு அவர்கள் மீண்டும் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது ராம் நகர் தனியார் வங்கி முன்பாக, அவர்களை 2 மோட்டார் சைக்கிள்கள் வழிமறித்தன.
வண்டியில் இருந்து பட்டாக்கத்தி, அரிவாளுடன் இறங்கிய 6 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட முயன்றது. எனவே அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தலைதெறிக்க தப்பி ஓடினர்.
இருந்தபோதிலும் 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் நித்தீஷ்குமார், ரஞ்சித்துக்கு படுகாயம் ஏற்பட்டது. கார்த்திக் சிறுகாயங்களுடன் தப்பினார். அதன்பிறகு அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நித்தீஷ், ரஞ்சித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ராம்நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்தீஷ்குமார் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏற்கெனவே பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
- சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ஈஷா கிராமோத்வம் திருவிழாவின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் என்னும் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதல்கட்டமாக, கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் கோவையில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தேர்வான வாலிபால், த்ரோபால் மற்றும் கபடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியை கோவை மேயர் திருமதி. கல்பான தொடங்கி வைத்தார். மேலும், தொடக்க விழா நிகழ்வில் 13-வது வார்டு கவுன்சிலர் திருமதி. சுமதி மற்றும் 14-வது கவுன்சிலர் திருமதி. சித்ரா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் சூலூர் அணியை வீழ்த்தி நஞ்சுண்டாபுரம் அணி முதலிடம் பிடித்தது. இதேபோல், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் தேவராயபுரம் அணியை வீழ்த்தி புள்ளாகவுண்டன் புதூர் அணி முதலிடம் பிடித்தது.
இதுதவிர, தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கபடி போட்டியில் ஆண்கள் பிரில் ஈரோடு மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் கரூர் மாவட்ட அணியும் முதலிடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திருமதி. வாசுகி அவர்கள் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.
மண்டல அளவில் தேர்வாகியுள்ள அணிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதில் கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும், வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
- கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது எனவும் வேண்டுகோள்
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நவமலை முதல் உடுமலை வரை உள்ள எங்கள் விளை நிலங்கள் வழியாக செல்லும் உயர்மின் கோபுரங்கள் மின் கம்பிகள் மற்றும் உதிரி பாகங்களை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் வழி தடங்களினால் பெருவாரியான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் விவசாயிகள் அனைவரும் குறுகிய கால பயிர்களையே சாகுபடி செய்து வந்தனர் இதனால் எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தினால் அன்றைய அரசு பாதிக்கப்பட்ட நிலத்திற்கு எந்த இழப்பீ டும் வழங்கவில்லை. ஆனால் இன்று வன விலங்குகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்துவதால் எந்த குறுகிய கால விவசாயமும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். தென்னை விவசாயம் மட்டுமே எங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். எனவே உயர்மின் கோபுரங்கள், உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் விவசாய நிலங்கள் மதிப்பிழந்து காணப்படுகின்றன.
மீண்டும் விரிவாக்கம் செய்தால் எங்கள் வாழ்வாதா ரமாக விளங்கும் தென்னை விவசாயத்திற்கும், குடியிருப்பு வீடுகள் பண்ணைகள், பாசன கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை அதன் அருகிலேயே அமைந்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே இந்த பணிகள் தொடங்கும் முன்பு ஏற்பட உள்ள இழப்பீட்டினை முறையாக கணக்கிட்டு, தென்னை மரத்தின் காய்ப்பு திறன் பற்றி வேளாண் துறையின் கணக்கீடு அடிப்படையில் சரியான நிவாரணத் தொகை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ராஷ்ட்ரிய இந்து மகாச பாவின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில் குண்டுவெடிப்பு குற்றவா ளிகளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது. இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீல னை செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
- காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம்
- நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து தரிசனம்
கவுண்டம்பாளையம்,
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
நேற்று மாலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு சூரிய கும்ப பூஜைகள், 2-ம்கால யாகபூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறப்பு, பெயர்சூட்டுதல் நடந்தது.
பின்னர் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடங்கள் மங்களஇசை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகருக்கும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து விநாயகரை தரிசித்தனர். தொடர்ந்து மகா அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
- கோவை அரசு ஆஸ்பத்திரி மீது குற்றச்சாட்டு
- 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
கோவை,
கோவை அடுத்த கணபதியை சேர்ந்தவர் பாபு (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்கள் ஸ்கேன் செய்ய முன்பதிவு செய்த பின் சில நாட்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பாபு இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விவரத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார்.
- கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை
- சந்திராயன்-3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம் அமைக்க வேண்டுகோள்
கோவை,
இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொறியியல் படிப்புகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்தியாவை நோக்கி நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்பதை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக ஜப்பானில் நிறைய வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. அங்கு இளைஞர்கள் குறைவு என்பதால் அந்த வேலை வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கணிணி மட்டுமே முக்கியம் இல்லை. மற்ற பொறியியல் துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். கணிணி மட்டுமே என்பதை தாண்டி பிற துறைகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது.
5 ஆண்டுகள் கழித்து கணிணி கோடிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. பொறியியல் படித்தால் வாழ்நாள் சிறப்பாக இருக்கும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது.
செல்போன் டவர் இல்லாமல் செயற்கைகோள் மூலம் இயக்கும் கைபேசி, அடுத்த தலைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. குலசேகரப்பட்டணத்தில் அமையும் ஏவுத்தளம், உலகின் மிகச்சிறந்த மையமாக அமையும்.
வர்த்தகரீதியில் தினம்-தினம் ஏவுகணைகள் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். நிலவை நோக்கிய பயணங்கள், பல மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. வெப்பமயமாக்கலை தடுக்கமுடியும்.
அடுத்த கட்ட ஆராய்ச்சி-நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருப்பதை எடுத்து வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
நிலவில் இருந்து தனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில டன்கள் எடுத்து வந்தாலே போதும். அதற்காக சில கட்டமைப்புகளை நிலவிலும் உருவாக்க முடியும்.
அதற்கு நிறைய தொழில்நுட்பம், ஆட்கள் தேவையாக இருக்கும். பொறியியல் படித்தவர்கள் அதிகம் தேவைபடுவார்கள். எனவே மாணவர்கள் பொறியியல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
விண்வெளி படிப்புகள் நிறைய வரவே ண்டும் என்பதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு ஸ்டெம் மையங்கள் ஏற்படு த்தப்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.சந்திராயன் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. நம்முடைய முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. நிலவில் நீர் இருப்பதும், துருவப்பகுதியில் சந்திராயன் இறக்கி உள்ளதும் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது.
விண்வெளியின் பருவநிலையை புரிந்து கொள்வதும் முக்கியம். விண்வெளி துறை போல விவசாயத்துறையை கொண்டு வர வே ண்டும், அதை நோக்கிய பயணங்களும் சிறப்பாக உள்ளன.விண்வெளிக்கு போய்வரும் தொழில்நு ட்பத்தை வைத்து விமான பயணத்தையும் மாற்ற முடியும். ராக்கெட் தொழில் நுட்பத்தில் சீக்கிரமாக, பத்திரமாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
நிலவுக்கு செல்ல பிறநாடுகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா தான் செல்ல வேண்டும் என்பதைத் தாண்டி உலகமே செல்ல வேண்டும்.
சந்திராயன்-3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இருக்கிறோம். அதை நோக்கிய விவாதங்கள் போய் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






