என் மலர்
உள்ளூர் செய்திகள்

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் பலி
- பொன்னேகவுண்டன்புதூர்-கரியாம்பாளையம் ரோட்டில் கார் மோதியது.
- அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கவுதம் (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி யில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறையில் வீட்டில் இருந்த கவுதம் தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள அவரது நண்பரான ஹாரூன் (23) என்பவரது வீட்டிற்கு செல்வதாக தனது தாயிடம் கூறி விட்டு சென்றார்.
பின்னர் கவுதம் அவரது நண்பரான ஹாரூனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பொன்னேகவுண்டன் புதூர்-கரியாம்பாளையம் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அன்னூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






