காதலனை திருமணம் செய்து போலீசில் தஞ்சம் அடைந்த இளம்பெண்

திருமணத்துக்கு எதிர்ப்ப தெரிவித்தால் வீட்டை விட்டு வெளியேறினார் காதல் ஜோடி பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை
காதலனை திருமணம் செய்து போலீசில் தஞ்சம் அடைந்த இளம்பெண்
Published on

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கு அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இந்துமதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இந்துமதியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க அவரசமாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதனையடுத்து இந்துமதி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றார்.

2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com