என் மலர்
நீங்கள் தேடியது "refuge with her boyfriend"
- வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் திருமணம்
- காதலர்களின் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 25). என்ஜினீயர். இவர் நண்பர்களிடம் கான்பரன்ஸ் மூலமாக பேசும் போது தேனியை சேர்ந்த தர்ஷினி பிரியா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் 2 பேரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி தர்ஷினி பிரியா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை தேடி வால்பாறைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வால்பாறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனடியாக போலீசார் காதலர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






