என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • முத்துப்பாண்டி கடந்த 3 ஆண்டுகளாக முல்லைநகரில் வசித்து வருகிறார்.
    • துணிக்கடையில் மேல்புறமாக சீரியல் பல்புகளை போட்டுக்கொண்டு இருந்தார்.

    கோவை,

    தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சோமனூர் அருகே உள்ள முல்லை நகருக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தார்.

    பின்னர் அங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

    இவர் அந்த பகுதியை சேர்ந்த மோட்சா ஆரோ க்கியதாஸ் என்பவர் நடத்தி வரும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று முத்து ப்பாண்டி ராமச்சிபாளை யத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் மேல்புறமாக சீரியல் பல்புகளை போட்டுக்கொண்டு இருந்தார்.

    அப்போது பல்புகளை கீழ் இருந்து மேல்நோக்கி வீசும் போது அந்த வழியாக சென்ற மின்சார வயர் மீது பட்டு முத்துப்பாண்டியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    இதில் உடல் கருகி உயிரு க்கு போராடிய அவரை அந்த வழியாக சென்ற வர்கள் மீட்டு சோமனூர் ஆரம்ப சுகாதார நிலைய த்துக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் முத்துப்பாண்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வால்பாறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
    • வன விலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் வனஊழியர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிய வகை சிங்கவால் குரங்குகள் புதுதோட்டம் வனப்பகுதியில் உள்ளன. அவற்றை வனத்து றையி னரும், தன்னார்வலர்களும் பாதுகாத்து வருகின்றனர்.

    வால்பாறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து காணப்படும்.

    அதன்படி நேற்றும் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. இந்தநிலையில் ஒரு சுற்றுலா வாகனம் நேற்று புதுத்தோட்டம் பகுதிக்கு வேகமாக வந்தது.

    அப்போது அங்கு ஒரு சிங்கவால் குரங்குகுட்டி சாலையை கடக்க முய ன்றது. அப்போது வேக மாக வந்த சுற்றுலா வாக னம் மோதியது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த சிங்க வால் குட்டி சம்பவ இட த்தில் பரிதாபமாக இறந்தது.

    விபத்தில் பலியான சிங்கவால் குட்டியை தாய் குரங்கு வேதனையுடன் வனப்பகுதிக்குள் எடுத்துச் சென்றது பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகள் ஆர்வலர்களிடம் பரிதா பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வால்பா றையை சேர்ந்த சமூகஆர்வ லர்கள் கூறிய தாவது:-

    சிங்கவால் குரங்குகள் நிறைந்த பகுதியாக உள்ள தால் புதுதோட்டம் முதல் வால்பாறை வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறி விக்க வேண்டும், மேலும் சுற்றுலா வாக னங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

    இதற்கான பதாகைகளை ரோட்டின் பல்வேறு பகுதி களில் வைக்கப்பட்டு உள்ளன. இருந்தபோதிலும் சிங்க வால் குரங்குகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கி ன்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வால்பாறை பகுதியில் சுற்றுலா வாகனம் மோதிய விபத்தில் சிங்கவால் குரங்கு பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வால்பாறை போக்குவரத்து சாலைகளில் வன விலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் வனஊழியர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகப்படியான வன த்துறை யினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளோம்.

    அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை மெதுவாக இயக்க வே ண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் இதுபோன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால் சம்பந்த ப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • சாக்குப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.
    • காலையில் அருகில் உள்ளவர்கள் இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதே என கேட்டபோது அப்படி ஒன்றுமில்லை என மலுப்பலாக பதில் அளித்தேன்.

    கோவை,

    கோவை மாவட்டம் மெட்டுவாவி அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு கிணற்றுக்குள் இருந்த சாக்குப்பையை மீட்டனர்.

    அப்போது சாக்குப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

    விசாரணையில், கிணற்றில் கிடந்த குழந்தையின் தாய், அதே பகுதியை சேர்ந்த வித்யா கவுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யா கவுரி மற்றும் அவரது தாய் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்கா தலில் பிறந்ததால் குழந்தையை கொன்று விட்டதாக வித்யா கவுரியின் தாய் புவனேஸ்வரி தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு புவனேஸ்வ ரியின் சகோதரி அம்மணியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    போலீசாரிடம் புவனே ஸ்வரி அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது:-

    எனது மகளுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விட்டது. இவர் தற்போது கணவரை பிரிந்து எங்களுடன் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கு எங்கள் பகுதியை சேர்ந்த டிரைவரான ரமேசுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகியதால் அவர் கர்ப்பமானார். ரமேஷிடம் தெரிவித்த போது கருவை கலைக்க கூறினார்.

    அதன்படி நான் எனது மகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அப்போது குழந்தை வளர்ச்சி அடைந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் என்னிடம் எனது மகள் வயிறு பெரிதாக இருப்பதாக கேட்டனர். அதற்கு நான் அவளுக்கு வயிற்றில் கட்டி என தெரிவித்து சமாளித்தேன்.

    சம்பவத்தன்று, எனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நான் எனது சகோதரி அம்மணியை அழைத்தேன். பின்னர் நானும், எனது சகோதரியும் சேர்ந்து பிரசவம் பார்த்தோம். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்ததும் அதிக சத்தத்துடன் அழுதது. திருமணம் ஆகாமலேயே வேறு ஒருவருடன் பழகி குழந்தை பிறந்தது தெரியவந்தால் குடும்ப மானம் போய் விடும் என்பதாலும், குழந்தை அழுது கொண்டே இருந்ததால் சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என பயந்து போன நாங்கள் குழந்தையை கொல்ல முடிவு செய்தோம்.

    எங்கள் மனதை கல்லாக்கி கொண்டு, வீட்டில் இருந்த சாக்குப்பையை எடுத்து அதில் குழந்தையை போட்டோம். பின்னர் எங்கள் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு எதுவும் நடக்காது போல் இருந்து விட்டோம்.

    காலையில் அருகில் உள்ளவர்கள் இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதே என கேட்டபோது அப்படி ஒன்றுமில்லை என மலுப்பலாக பதில் அளித்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் குழந்தையை கொன்ற புவனேஸ்வரி, அவரது சகோதரி அம்மணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக வித்யா கவுரி இருந்ததும் தெரியவந்தது.

    தற்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், போலீஸ் பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • செல்வக்குமார் தனது நண்பர்களுடன் ஊத்துக்குளி வழியாக செல்லும் ஆற்றில் குளிக்க சென்றனர்.
    • செல்வகுமாருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    கோவை,

    திருப்பூர் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 21). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அவரது நண்பர்களான சபரிகிரி (25), அருண்குமார் (25) ஆகியோருடன் ஆழியாறு அருகே உள்ள பூவல்லபருத்தியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு வைத்து மது குடித்தனர். பின்னர் 3 பேரும் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் ஜமீன் ஊத்துக்குளி வழியாக செல்லக்கூடிய ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது செல்வகுமார் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீர் அவரை அடித்து சென்றது. அப்போது அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் செல்வக்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது நண்பர்கள் பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட செல்வக்குமாரின் உடலை தேடினர்.

    பின்னர் போலீசார் ராமர்கோவில் வீதி உள்ள பகுதியில் இருந்து உடலை மீட்டனர். இதனையடுத்து போலீசார் செல்வக்கு மாரின் உடலை பிரேத பரிசோ தனைக்கு பொ ள்ளாச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளா ச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பராமரிப்பு இல்லாததால் சில ஆண்டுகளாக தடுப்பணை சிதிலமடைந்து வந்தது.
    • நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் பல இடங்களில் பண்ணை குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வால்பாறை,

    ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சேதமடைந்த தடுப்ப ணையை விவசாயிகள் நிதி திரட்டி சீரமைத்துள்ளனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே அங்க லக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நரிமுடக்கு என்னும் மலையடிவார பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது.

    இதனால் பருவமழை காலங்களில் தடுப்பணையில் தேங்கும் மழைநீரால், சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக தடுப்பணை சிதிலமடைந்து வந்தது.

    இதனால் நீர் தேங்காமல் விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளி கிணறு, ஆழ்கு ழாய் கிணறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறைந்தது. விவசாயம் பாதிக்கப்பட்டதால், தடுப்பணையை சீரமைக்க தமிழக அரசுக்கு பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை யடுத்து, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து நிதி திரட்டி சிதில மடைந்த தடுப்பணையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறு ம்போது, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் பல இடங்களில் பண்ணை குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இப்பகுதியில் பள்ளங்கள், சிற்றோடைகளில் வரும் மழைநீரை சேமித்து வைக்க மலையடிவாரம் முதல் பாலாறு வரை பல இடங்களில் தடுப்பணைகளை அரசு கட்டியது. கடந்த சில ஆண்டுகளாக தடுப்பணைகள் பராமரிப்பு இன்றி சிதலமடைந்து வருகின்றன.

    குறிப்பாக, தடுப்பணைகளின் கற்கள் பெயர்ந்தும், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் நீர்கசிவு ஏற்படுவதால் மழைநீரை சேமிக்க முடியவில்லை.

    இதனால் நாங்களே சீரமைத்து வருகிறோம். இதேபோன்று பல இடங்களில் பராமரிப்பின்றி உள்ள தடுப்பணைகளை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவரது கணவர் சாப்பிட்டு விட்டு இரவு வேலைக்கு சென்றார். இரவு 11 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் ரமேஷ் (வயது 32) என்பவர் இளம்பெண் வீட்டில் காலிங் பெல்லை அழுத்தினார். இதனை கேட்டு இளம்பெண் கதவை திறந்தார். அப்போது இளம்பெண் என்னவென்று கேட்டார். அதற்கு ரமேஷ் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டது என கூறினார்.

    பின்னர் அவரது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து வீட்டை சுற்றி தேடுவது போல நடித்தார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை அவர் உறுதி செய்தார். திடீரென டிரைவர் ரமேஷ் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்தார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    அதன் பிறகு ரமேஷ் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் வர மறுத்துவிட்டார். இளம்பெண் சத்தம் போடவே டிரைவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    பின்னர் 10 நிமிடத்துக்கு பிறகு ரமேஷ் கதவு, ஜன்னலை தட்டியும், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியும் தொல்லை கொடுத்தார். ஆனால் இளம்பெண் கதவை திறக்கவில்லை. அதன் பின்னர் அவர் அங்கு இருந்து சென்றார்.

    மறுநாள் காலையில் இளம்பெண் அவரது கணவர் வந்ததும் இது குறித்து கூறினார். பின்னர் இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • சுந்தராபுரம் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் சரண்யா (வயது 26), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். இது சரண்யாவுக்கு பிடிக்கவில்லையென தெரிகிறது.

    இந்த நிலையில் சரண்யாவின் பெற்றோர் நேற்று பல்லடம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சரண்யா போன் அழைப்பை ஏற்கவில்லை.

    எனவே சந்தேகம் அடைந்த பெற்றோர் பக்கத்து வீட்டு அருகில் உள்ள ஒருவருக்கு போன் செய்து விசாரித்தனர். இதனால் அவர் உடனடியாக அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது சரண்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சரண்யாவின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

    உடனடியாக கோவை திரும்பிய பெற்றோர், சரண்யாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சரண்யா திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சுந்தராபுரம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரதம் முடிந்ததால் இறைச்சி உணவுகளை சாப்பிட ஆர்வம்
    • உக்கடத்தில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு

    கோவை,

    தமிழகத்தில் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. எனவே அந்த மாதத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் இறைச்சி உணவுகளை சாப்பிடுவது இல்லை.

    இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் பெரிய அளவுக்கு இல்லை.

    எனவே அங்கு மீன்கள் மற்றும் இறைச்சிகளின் விலை வெகுவாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து தற்போது ஐப்பசி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் விரதம் முடிந்து இறைச்சி உணவுகளை சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட் மற்றும் பல்வேறு கோழி-மட்டன் இறைச்சி கடைகளில் தற்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அவர்கள் குடும்பத்துடன் மார்க்கெட்டுக்கு வந்திருந்து, அங்கு விற்கப்பட்டு வரும் மீன்கள் மற்றும் இறைச்சிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    இதனால் அங்கு உள்ள பெரும்பாலான கோழி-மட்டன் விற்பனை கடைகள் மற்றும் மீன் விற்பனையகங்களில் தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளை வாவல் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இது தற்போது ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல கருப்பு வாவல் முன்பு ரூ.600-க்கு விற்பனை ஆனது. தற்போது ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இருந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு மிகவும் பிடித்த இறைச்சிகளை விரும்பி வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    கோவை உக்கடம் மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ மீன்களின் விலை பற்றிய விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    கேரள மத்து (சாளை) ரூ.200 (150), வெள்ளை வாவல் ரூ.1200 (1000), கருப்பு வாவல் ரூ.800 (600), நண்டு ரூ.600 (450), ஊளி ரூ.300 (250), வஞ்சிரம் (சிறியது) ரூ.600 (500), வஞ்சிரம் (பெரியது) ரூ.750 (700), முரல் ரூ.500 (400), பாறை ரூ.500 (400), விலா ரூ.550 (400), நெத்திலி ரூ.400 (300), கட்லா ரூ.200 (180), ரோகு ரூ.180 (150), சிலேபி ரூ.120, அயிரை ரூ.200 (150), கொடுவா ரூ.450 (500).

    • லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
    • பொதுமக்கள் டிரைவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்

    சூலூர்,

    சூலூர் அருகே காரம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). பெயிண்டர். இவருக்கு மனைவி, மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் முருகேசன் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரி பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே அவர்கள் கும்பலாக திரண்டு வந்து அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷ்யாம்குமார் என்பதும், தெலுங்கானாவை சேர்ந்த சரக்கு லாரியில் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆற்றில் குளித்த வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி எதிரொலி
    • எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையானது மிகசிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

    இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள், காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில் கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டபுரத்தை சேர்ந்த வினித்(வயது20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நபில்(20) ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் வாலபாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர்.

    அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, சோலையாறு சுங்கம் நல்லகாத்து ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 பேரும் ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் நல்லகாத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த இடத்தை அமைச்சர் முத்துசாமியும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறும், இதுபோன்ற உயிர் பலிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது நகர மன்ற முன்னாள் தலைவர் கோழி கடை கணேசன் நல்லகாத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கம்பிவேலி அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நல்லகாத்து ஆற்றுப்பகுதியை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு, 200 மீட்டர் தொலைவிற்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது.

    மேலும் அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    நல்லகாத்து ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வால்பாறை தி.மு.க நகர செயலாளர் சுதாகர் மற்றும் முன்னாள் தி.மு.க நகர மன்ற தலைவர் கோழிகடை கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சமரசம் பேசியபோது தகாத வார்த்தைகளால் திட்டினார்
    • குடிபோதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சக்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது நேராக வீட்டிற்கு செல்லாம், அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே சென்றார்.

    பின்னர் வேக, வேகமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

    அவர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்ததுடன், தன்னை அழைத்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார். தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டு கொண்டே இருந்தார்.

    இதுகுறித்து பொது மக்கள், ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் தொட்டி மீது நின்றிருந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இன்று பேலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோது சம்பவம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு நம்பர் 10 முத்தூரை சேர்ந்தவர் மனோகரன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    காயத்ரி மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், அரை பவுன் வெள்ளி கொலுசு, 6 கிராம் தங்ககாசு, ரூ.1200 ரொக்க பணம் மாயமாகி இருந்தது.

    இவர்கள் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதன்பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் வேதாச்சலம். இவரது மனைவி கிருஷ்ணவேணி(வயது67). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். மகளின் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், இவர் தனது தாய், தந்தையுடன் இங்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் பகுதியிலேயே வேதாச்சலத்தின் மகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த பணியை வேதாச்சல மும், அவரது மனைவியும் கவனித்து வருகின்றனர்.

    நேற்று 2 பேரும் வழக்கம் போல பணி நடைபெறும் வீட்டிற்கு சென்று அங்கு வேலைகளை கவனித்து கொண்டிருந்தனர்.

    அப்போது இவர்களது மகன் போன் செய்து, வீடு திறந்து கிடப்பதாக தெரிவிக்கவே அதிர்ச்சியாகி 2 பேரும் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், மோதிரம் உள்பட 12 அரை பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து கிருஷ்ணவேணி பொள்ளாச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அவர்களது வீட்டின் அருகே வசித்து வரும் பெண்ணை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    ×