என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கவால் குரங்கு பலி"
- வால்பாறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
- வன விலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் வனஊழியர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிய வகை சிங்கவால் குரங்குகள் புதுதோட்டம் வனப்பகுதியில் உள்ளன. அவற்றை வனத்து றையி னரும், தன்னார்வலர்களும் பாதுகாத்து வருகின்றனர்.
வால்பாறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து காணப்படும்.
அதன்படி நேற்றும் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. இந்தநிலையில் ஒரு சுற்றுலா வாகனம் நேற்று புதுத்தோட்டம் பகுதிக்கு வேகமாக வந்தது.
அப்போது அங்கு ஒரு சிங்கவால் குரங்குகுட்டி சாலையை கடக்க முய ன்றது. அப்போது வேக மாக வந்த சுற்றுலா வாக னம் மோதியது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த சிங்க வால் குட்டி சம்பவ இட த்தில் பரிதாபமாக இறந்தது.
விபத்தில் பலியான சிங்கவால் குட்டியை தாய் குரங்கு வேதனையுடன் வனப்பகுதிக்குள் எடுத்துச் சென்றது பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகள் ஆர்வலர்களிடம் பரிதா பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வால்பா றையை சேர்ந்த சமூகஆர்வ லர்கள் கூறிய தாவது:-
சிங்கவால் குரங்குகள் நிறைந்த பகுதியாக உள்ள தால் புதுதோட்டம் முதல் வால்பாறை வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறி விக்க வேண்டும், மேலும் சுற்றுலா வாக னங்களை மெதுவாக இயக்க வேண்டும்.
இதற்கான பதாகைகளை ரோட்டின் பல்வேறு பகுதி களில் வைக்கப்பட்டு உள்ளன. இருந்தபோதிலும் சிங்க வால் குரங்குகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கி ன்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வால்பாறை பகுதியில் சுற்றுலா வாகனம் மோதிய விபத்தில் சிங்கவால் குரங்கு பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வால்பாறை போக்குவரத்து சாலைகளில் வன விலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் வனஊழியர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகப்படியான வன த்துறை யினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளோம்.
அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை மெதுவாக இயக்க வே ண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால் சம்பந்த ப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.






