என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆனைமலை அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
- சமரசம் பேசியபோது தகாத வார்த்தைகளால் திட்டினார்
- குடிபோதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சக்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது நேராக வீட்டிற்கு செல்லாம், அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே சென்றார்.
பின்னர் வேக, வேகமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.
அவர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்ததுடன், தன்னை அழைத்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார். தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டு கொண்டே இருந்தார்.
இதுகுறித்து பொது மக்கள், ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் தொட்டி மீது நின்றிருந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இன்று பேலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






