search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தை  என்பதால் அவமானம் கருதி கொலை செய்தோம்-இளம்பெண்ணின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்
    X

    பொள்ளாச்சி அருகே கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தை என்பதால் அவமானம் கருதி கொலை செய்தோம்-இளம்பெண்ணின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்

    • சாக்குப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.
    • காலையில் அருகில் உள்ளவர்கள் இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதே என கேட்டபோது அப்படி ஒன்றுமில்லை என மலுப்பலாக பதில் அளித்தேன்.

    கோவை,

    கோவை மாவட்டம் மெட்டுவாவி அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு கிணற்றுக்குள் இருந்த சாக்குப்பையை மீட்டனர்.

    அப்போது சாக்குப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

    விசாரணையில், கிணற்றில் கிடந்த குழந்தையின் தாய், அதே பகுதியை சேர்ந்த வித்யா கவுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யா கவுரி மற்றும் அவரது தாய் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்கா தலில் பிறந்ததால் குழந்தையை கொன்று விட்டதாக வித்யா கவுரியின் தாய் புவனேஸ்வரி தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு புவனேஸ்வ ரியின் சகோதரி அம்மணியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    போலீசாரிடம் புவனே ஸ்வரி அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது:-

    எனது மகளுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விட்டது. இவர் தற்போது கணவரை பிரிந்து எங்களுடன் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கு எங்கள் பகுதியை சேர்ந்த டிரைவரான ரமேசுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகியதால் அவர் கர்ப்பமானார். ரமேஷிடம் தெரிவித்த போது கருவை கலைக்க கூறினார்.

    அதன்படி நான் எனது மகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அப்போது குழந்தை வளர்ச்சி அடைந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் என்னிடம் எனது மகள் வயிறு பெரிதாக இருப்பதாக கேட்டனர். அதற்கு நான் அவளுக்கு வயிற்றில் கட்டி என தெரிவித்து சமாளித்தேன்.

    சம்பவத்தன்று, எனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நான் எனது சகோதரி அம்மணியை அழைத்தேன். பின்னர் நானும், எனது சகோதரியும் சேர்ந்து பிரசவம் பார்த்தோம். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்ததும் அதிக சத்தத்துடன் அழுதது. திருமணம் ஆகாமலேயே வேறு ஒருவருடன் பழகி குழந்தை பிறந்தது தெரியவந்தால் குடும்ப மானம் போய் விடும் என்பதாலும், குழந்தை அழுது கொண்டே இருந்ததால் சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என பயந்து போன நாங்கள் குழந்தையை கொல்ல முடிவு செய்தோம்.

    எங்கள் மனதை கல்லாக்கி கொண்டு, வீட்டில் இருந்த சாக்குப்பையை எடுத்து அதில் குழந்தையை போட்டோம். பின்னர் எங்கள் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு எதுவும் நடக்காது போல் இருந்து விட்டோம்.

    காலையில் அருகில் உள்ளவர்கள் இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதே என கேட்டபோது அப்படி ஒன்றுமில்லை என மலுப்பலாக பதில் அளித்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் குழந்தையை கொன்ற புவனேஸ்வரி, அவரது சகோதரி அம்மணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக வித்யா கவுரி இருந்ததும் தெரியவந்தது.

    தற்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், போலீஸ் பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×