என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் திருமணம் பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை
    X

    கோவையில் திருமணம் பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை

    • வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • சுந்தராபுரம் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் சரண்யா (வயது 26), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். இது சரண்யாவுக்கு பிடிக்கவில்லையென தெரிகிறது.

    இந்த நிலையில் சரண்யாவின் பெற்றோர் நேற்று பல்லடம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சரண்யா போன் அழைப்பை ஏற்கவில்லை.

    எனவே சந்தேகம் அடைந்த பெற்றோர் பக்கத்து வீட்டு அருகில் உள்ள ஒருவருக்கு போன் செய்து விசாரித்தனர். இதனால் அவர் உடனடியாக அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது சரண்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சரண்யாவின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

    உடனடியாக கோவை திரும்பிய பெற்றோர், சரண்யாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சரண்யா திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சுந்தராபுரம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×