என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ஆலாந்துறை பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சுமதி (வயது 35). கூலித் தொழிலாளி.

    கடந்த சில நாட்களாக இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்த போது திடீரென சுமதியின் உடல் நிலை மோசமடைந்தது.

    இதனையடுத்து அவரை அவரது கணவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சுமதியை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்கள்.

    • 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டனர்.
    • நள்ளிரவுக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும், நகராட்சி ஆணையாளர், பொறியா ளர்கள் கூட்டத்திற்கு வராதது தொடர்பாகவும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

    இதனால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சி லர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயம் தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் என்பவர் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசினார்.

    இந்த நிலையில் நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களுக்கு ஆதரவாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அ.தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அலுவலக நுழைவு வாயில் உள்பட அனைத்து இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர்.

    அவர்களை போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 500 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.கவினரை கைது செய்து, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.. இதேபோல் 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வெளியில் வர மறுத்ததால் போலீசார் கவுன்சிலர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று தயாராக நிறுத்தி வைத்திருந்த வேனில் ஏற்றி கைது செய்தனர்.

    பின்னர் அவர்களும், அ.தி.மு.க.வினர் வைக்கப்பட்ட மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் நகரமே சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மேட்டுப்பாளையம் விரைந்தார். அங்கு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பேசினர். அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல முறை கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறிய எந்த பிரச்சினையின் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது மக்கள் பிரச்சினைகளை கேட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது தி.மு.க.வினர் நாற்காலியை தூக்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாருமே இதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களுக்காக குரல் கொடுத்த அ.தி.முக.கவுன்சிலர்களை கைது செய்துள்ளனர். அதிகாரத்தால் அ.தி.மு.கவை அடக்கி ஒடுக்கி முடக்கி விடலாம் என்று தி.மு.க. நினைக்க வேண டாம். அது ஒருபோதும் நடக்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இரவில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விடுவிக்கவில்லை.

    இந்த நிலையில் நள்ளிரவுக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    • புலிக்குத்திகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டை போட்டு கொன்று உயிர்நீத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
    • தொல்லியல்துறை அதிகாரிகள் புலிக்குத்தி கல்லை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை உக்கடம்-சுங்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதற்காக அங்கு ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்குள் இருந்து புலிக்குத்திக்கல் மீட்கப்பட்டு உள்ளது. இதனை தொல்லி யல்துறை அதிகாரிகள் மீட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    மாநகரின் மையப்பகுதியில் புலிக்குத்தி கல் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புலிக்குத்தி கல் சிற்பத்தை ஆய்வுசெய்து வரும் கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது:-

    இது 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம். இதில் அடர்ந்த காடுகளை அழித்து இந்த பகுதியில் சிவன் கோவில் கட்டப்பட்டு உள்ளதாக17-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழனின் பூர்வ பட்டயத்தில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் அடர்ந்த காடுகளை அழிக்க பெண் தெய்வம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எனவே மன்ன்ன கரிகாலன் விலங்குகளை பலி கொடுத்து சிவன் கோவிலை கட்டினான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புலிக்குத்திகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டை போட்டு கொன்று உயிர்நீத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    எனவே அந்த வீரனின் நினைவை போற்றும் வகையில் அந்த கால ஆட்சியாளர்கள் இங்கு புலிக்குத்தி நடுகல்லை வைத்து இருக்க லாம் எனவும் கருதப்படுகிறது.

    புராதன காலத்தில் கோவை மாவட்டம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்து உள்ளன. எனவே அப்போதைய அரசன் அந்த பகுதிகளில் உள்ள தெய்வங்களுக்கு விலங்குகளை பலிகொடுத்து கோவன் புத்தூர், இருகூர், வெள்ளலூர், துடியலூர் ஆகிய பகுதிகளை உருவாக்கி உள்ளான்.

    மேலும் கோவை மாவட்டத்தில் எண்ணற்ற புலிக்குத்தி கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த வேண்டும். இதுதவிர அந்த சிற்பம் மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் நடுகல்லை நட்டு வைத்து பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே தொல்லியல்துறை அதிகரிகள் புலிக்குத்தி கல்லை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவற்றை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை உக்கடம் சுங்கம் சாலை விரிவாக்க பணிக்காக மட்டுமே நடுகல் சிற்பம் அகற்றப்பட்டு உள்ளது. அங்கு பணிகள் முடிந்த பிறகு புலிக்குத்தி கல் மீண்டும் நிர்மாணிக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.

    • மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், அது தொடர்பாகவும் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக பதவி வகித்து வருபவர் மீனா ஜெயக்குமார். இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் தனது கணவர் ஜெயக்குமாருடன் வசித்து வருகிறார். ஜெயக்குமார் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு இன்று அதிகாலை 3 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மீனா ஜெயக்குமாரின் வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின்போது யாரும் உள்ளே வரமுடியாதபடி வீட்டின் கதவினை அடைத்து விட்டனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். வீட்டில் உள்ள நபர்களை தவிர அங்கிருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டனர்.

    அதனை தொடர்ந்து அதிகாரிகள், வீடு முழுவதும் சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக அலசி ஆராய்ந்து, சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தெரிகிறது.

    மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், அது தொடர்பாகவும் சோதனை மேற்கொண்டனர். மேலும், இவர் அரசு ஒப்பந்தங்கள் ஏதாவது எடுத்து பணி செய்துள்ளாரா? அப்படி செய்திருந்தால் அது தொடர்பான ஆவணங்கள் வீட்டில் இருக்கிறதா? என்பதையும் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

     

    வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திய தி.மு.க. பெண் பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் வீடு. 

    வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திய தி.மு.க. பெண் பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் வீடு. 

    இதேபோல் அதே வளாகத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையையொட்டி அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர மற்ற நபர்களை உள்ளே அனுமதிக்காமலும், கூட்டம் கூடாமலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீராமுக்கு சொந்தமான அலுவலகங்கள் சவுரிபாளையம் மற்றும் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வருகின்றன. அந்த இடங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கோவை கிழக்கு மண்டல தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. சிங்காநல்லூரில் உள்ள இவரது வீட்டிற்கு 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.

    வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றியுள்ள வருமான வரித்துறையினர் இது தொடர்பாக வீட்டில் இருந்த எஸ்.எம்.சாமியிடமும் விசாரணை நடத்தினர்.

    கோவையில் தி.மு.க. பிரமுகர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • நகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த 31-ந்தேதி நடந்தது.

    அப்போது கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள் வராதது குறித்தும், குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர். இதனால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கவும் முயற்சி செய்தனர்.

    அந்த சமயம் தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் என்பவர் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசினார்.

    இந்த நிலையில் நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நகராட்சி ஆணையாளர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனாலும் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. இதனால் தொடர்ந்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாக அ.தி.மு.க கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது.

    நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ள அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இரு கட்சியினரும் மேட்டுப்பாளையம் போலீசில் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    இந்த நிலையில், போராட்டம் 3வது நாளாக நீடிப்பதையொட்டி நகராட்சி அலுவலகத்திற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சியினர் அதிகளவில் திரண்டு வர இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அங்கு டி.எஸ்.பி. பால்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் நவநீத கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்), ராஜசேகர்(காரமடை), நித்யா(அன்னூர்) தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலகம் முன்பு கூட்டம் கூடாமலும் பார்த்து கொள்கின்றனர்.

    இதுதவிர நகராட்சி அலுவலகத்திற்கு கட்சியினர் வராத வகையில் 4 இடங்களில் தடுப்புகளும் வைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக மேட்டுப்பாளையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    • சண்முகம் மீது கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.
    • எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைகிறேன் என சண்முகம் கூறியுள்ளார்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.

    வழக்கு தொடர்பாக போலீசார் சண்முகத்தை கடந்த சில வாரங்களாக தேடி வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் ரவுடி சண்முகம் இன்று தனது வக்கீல்களுடன் கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    பின்னர் அவர் நீதிபதி முன்பு கோர்ட்டில் சரண் அடைந்தார். முன்னதாக சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் என்னை சுட்டு விடுவேன் எனவும், என் குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார்கள்.

    என் குடும்பத்தினருக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் தானாக முன்வந்து இன்று வக்கீல்களுடன் வந்து கோர்ட்டில் சரண் அடைந்துள்ளேன்.

    நான் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து 2 மாதங்கள்தான் ஆகின்றது. திருந்தி வாழ்ந்து வரும் என்னை போலீசார் தொடர்ந்து தேடி வந்ததால் சரண் அடைந்தேன்.

    எனது சகோதரர் மீதும் 5 வழக்குகள் உள்ளன.சமீபத்தில் அவரை பிடித்த போலீசார் கை, கால்களை உடைத்து விட்டனர். எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னராஜ் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
    • ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை புளியகுளம் அருகே உள்ள சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 39). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோடு வேனை கடனுக்கு வாங்கி ஓட்டி வந்தார். ஆனால் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னராஜ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பிரியா ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரைச் சேர்ந்தவர் பிரியா (வயது 43). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 அரை பவுன் தங்கச் செயினை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
    • விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

    கோவை,

    கோவை வ.உ.சி. மைதானம் அருகே நேரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

    இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் இருந்தது. கடந்த 2008-ல் அமைக்கப்பட்ட ஓடுதளம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஓடுதளத்தை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. மேலும் விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

    சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தடிக் ஓடுதளம் பாதையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், தடகள விளை யாட்டு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சிந்தடிக் ஓடுதளம் தங்களின் பயிற்சி மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நேரு விளையாட்டு அரங்கின் ஓடுதளம் மற்றும் மைதானம் ஆகியவற்றை சீரமைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர்கள் கூறினர்.  

    • காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய கல்லறை தோட்டத்துக்கு சென்ற கிறிஸ்தவர்கள், அங்கு உள்ள கல்லறைகளுக்கு வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய பங்குதந்தை ஜெகன்ஆன்டனி தலைமையில் இறந்தோருக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இதேபோல வால்பாறை புனிதலூக்கா ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. மேலும் சி.எஸ்.ஐ ஆலயம், முடிஸ் புனித அந்தோணியார் ஆலயம், ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயம் மற்றும் சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. 

    • செந்தில்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
    • செந்தில்குமார் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). எலக்ட்ரிசீயன். சம்ப வத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார்.

    அப்போது செந்தில்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்பட 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய செந்தில்குமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரிசீயன் வீட்டில் 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    சரவணம்பட்டி காளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் (39). ஐ.டி. ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான சேலத்துக்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி என மக்கள் கூறியுள்ளனர்.
    • நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் மதுக்கரை மார்க்கெட், வேலந்தாவளம், மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கும்.

    இதனால் இந்த சாலை எப்போதும் மிகுந்த பரபரப்பான பகுதியாகவே காணப்படும். பல சமயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    இதற்கு முக்கிய காரணமாக அந்த பகுதியில் சாலைையயொட்டி இருந்த ஆக்கிரமிப்புகளே காரணம் என்றும், அதனை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.

    அதன்படி சாலை நன்கு விரிவாக்கப்பட்டு போக்குவரத்திற்கு சிரமம் இன்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அதிவேகமாக அந்த சாலையில் செல்ல தொடங்கின.

    இதனால் சாலையின் ஒரு பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு கடப்பது மக்களுக்கு சிரமமாகியது. சில நேரங்களில் மக்கள் விபத்தில் சிக்கும் நிலைமையும் உருவானது. ஏனென்றால் வாகனத்தில் வருவோம் மெல்ல வராமல் அதிவேகத்தில் வருகின்றனர். வாகனம் வெகுதூரம் வருகிறதே என்று சாலையை கடந்தால், வேகமாக வந்து நம்மீது மோதுவது போல் நின்று விடுகிறது. எனவே இதற்கு சாலையின் நடுவே தடுப்புகள் வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இதற்கு தீர்வு காணும் வகையில், சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கும் பணியை தொடங்கினர். முதல் கட்டமாக சுந்தராபுரத்தில் இருந்து காமராஜர் நகர் வரை இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சாலையின் மற்ற பகுதிகளிலும் தடுப்புகள் வைக்கும் பணி நடக்க உள்ளது.

    இதுகுறித்து மக்கள் கூறும் போது, வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி. இதனால் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லும்.

    தடுப்பு வைக்கப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. எனவே நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

    ×