என் மலர்
செங்கல்பட்டு
பக்கிங்காம் கால்வாயில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பக்கிங்காம் கால்வாயில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூர் நியூகுமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவருடைய மகள் பூங்கொடி (வயது 34). இவருக்கும் திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த சிவசக்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான 3 ஆண்டுகளிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பூங்கொடி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பூங்கொடியின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். அவரது தம்பி கடைக்கு சென்று விட்டார். மகள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார்.
பின்னர் வீட்டுக்கு சென்ற பூங்கொடியின் மகள் தனது தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். அவருடைய அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து அவரது தம்பி மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் பூங்கொடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை பிரிந்து வாழும் விரக்தியில் பூங்கொடி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர் பூங்கா அருகே ரூ.55 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
711 மீ நீளம், 22 மீ அகலம் கொண்ட 9 வழி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் அரசு பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
* பணிகளை முடித்து பெருங்களத்தூர் மேம்பாலத்தை 2021 அக்டோபரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருநீர்மலையில் இருசக்கர வாகனம் மீது தண்ணீர் டிராக்டர் மோதியதில் சென்னை மாநகராட்சி துப்புரவு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை விஜயகுமார் வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை சாலை வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த தண்ணீர் டிராக்டர் ஒன்று விஜயகுமார் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை டிராக்டர் சிறிது தூரம் இழுத்து சென்றது.
இதில் விஜயகுமாரின் 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது.
இதற்கிடையில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்ணீர் டிராக்டர் ஓட்டுனரான தனசேகர் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளை கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்க நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய வைபை கருவி நடைமுறைக்கு வந்துள்ளது
செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை விரைவில் குணப்படுத்தும் நோக்கில் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க ‘டோஷி’ எனப்படும் நவீன ஆக்சிஜன் கருவி நோயாளிகளின் படுக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் நோயாளியின் இதயதுடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. மேலும் இதை வை-பை மூலம் தொலைவில் இருந்தவாறு கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 25 நவீன கருவிகள் உபயோகத்தில் உள்ள நிலையில், மேலும் 25 கருவிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவியில் நோயாளி படுக்கையில் இல்லாமல் இருந்தாலும் உடனே அலாரம் ஒலித்து காட்டி கொடுத்து விடும் வசதியும் உள்ளது.
அதேபோல இங்கு சிறப்பு ஆக்சிஜன் கருவிகள், அதிவேக பிராணவாயு கருவி, ஆக்சிஜன் ஹெல்மெட் போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கருவிகளின் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ. 7லட்சம் வரை இருக்கும் என்றும், இக்கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் குறையும் என ஆஸ்பத்திரி டீன் சாந்திமலர் கூறினார். மேலும் 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ கண்காணிப்பு அறையும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திரண்டனர். புராதன சின்னங்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாமல்லபுரம்:
கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீடிக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்படாமல் உள்ளன. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் பலர் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களுக்கு வர தொடங்கி உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தனர். கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ள பகுதிக்கு சென்றனர். அங்கு பார்வையாளர் கட்டண மையம் மூடப்பட்டு புராதன சின்னங்கள் திறக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளதை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் திறந்த வெளியில் உள்ள அர்ச்சுணன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து சென்றனர். மழை தூறலையும் பொருட்படுத்தாமல் பலர் சிற்பங்கள் முன்பு நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் நேற்று ஆன் லைன் வகுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். இ-பாஸ் தளர்வு காரணமாக அதிகமானோர் கார், இரு சக்கர வாகனங்களில் மாமல்லபுரம் வந்திருந்ததை காண முடிந்தது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறும்போது:-
கடந்த சில மாதங்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த நாங்கள் ஆர்வத்துடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தோம்.
முக்கியமான புராதன சின்னங்கள் திறக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாகவும், சாலை ஓரத்தில் பார்வையாளர் கட்டணம் இல்லாத அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட ஒரு சில புராதன சின்னங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அரசு உடனடியாக கடற்கரை கோவில் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேபோல் தங்கள் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசும், தொல்லியல் துறை நிர்வாகமும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில் வங்கி ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வங்கியில் காசாளராக பணியாற்றி வருபவர் நந்தகோபால். இவர் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையம் எதிரே குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 5 பவுன் நகை, டி.வி., வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருடப்பட்டிருந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவுபடி மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம் தலைமையில் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், செந்தில்வேலன், திருநாவுக்கரசு, சரவணன், ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் அடுத்த தாழம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வங்கி ஊழியர் வீட்டில் திருடியதும், அவர்கள் ஓட்டி வந்த கார் வங்கி ஊழியருக்குரியது என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் விஜி (வயது 26), புதுப்பட்டினம் ராஜா (26) மற்றும் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, டி.வி போன்றவை கைப்பற்றப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
கொரோனா ஊரடங்கால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வார சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பல்லாவரம் வார சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாரந்தோறும் இங்கு குவிந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவது வழக்கம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டு தங்கள் பொருட்களை விற்று வந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து வியாபாரம் செய்வது உண்டு. கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சந்தை செயல்படவில்லை. இதனால் இந்த சந்தையை மட்டுமே நம்பியிருந்த வியாபாரிகள், சென்னையில் வாடகை கொடுக்கக்கூட வழியில்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். எஞ்சிய சில வியாபாரிகளும் மீன், காய்கறி மற்றும் கோலமாவு என கிடைத்த வியாபாரத்தை செய்து வந்தனர். இதில் பல வியாபாரிகள் கடன் வாங்கி கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சென்னையில் அல்லல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் செய்யப்பட்டதால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமையான நேற்று மீண்டும் பல்லாவரத்தில் வாரசந்தை செயல்பட பரங்கிமலை-பல்லாவரம் கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் அனுமதி அளித்தது.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் தடவையாக வார சந்தை திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை அதிகாலையிலேயே கொண்டு வந்து பல்லாவரம் சந்தையில் வியாபாரத்தை தொடங்கினர். ஆனால் சந்தையில் வழக்கமான கூட்டத்தைவிட குறைவாகவே மக்கள் வந்தனர்.
இதுதொடர்பாக சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனாவால் எங்கள் வாழ்வாதாரம் இழந்து சந்தையில் விற்க வைத்திருக்கும் பொருட்களை குடோனில் வைத்துக்கொள்ளக்கூட வாடகை கொடுக்க வழியில்லாமல் கடும் துயரத்தில் இருந்தோம். கிடைக்கும் வேலைகளை செய்து உயிர் பிழைத்தோம். தற்போது மீண்டும் வாரசந்தையை திறந்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை நம்பியே நாங்கள் கடையை திறந்து உள்ளோம். முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. அடுத்த வாரம் முதல் அதிக மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். மக்களால் நாங்கள் மீண்டும் வசந்தம் பெறுவோம்.

சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதல் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த மோரை, அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 25). இவரது நண்பர் பிரவீன் ராஜ்(21). இவர்கள் இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் அசோக்குமார் அமர்ந்து சென்றார்.
சென்னீர்குப்பம்-ஆவடி சாலையில் காடுவெட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே ஓடிவந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அசோக்குமார் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லேசான காயங்களுடன் பிரவீன்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான அசோக்குமாருக்கு, அவரது உறவினர் மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் இந்த மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்து போனதால் அதற்குரிய இறுதி சடங்குகள் அனைத்தும் முடித்துவிட்டு அடுத்த மாதம் திருமணத்தை நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் அஜித் என்கிற பாலமுருகன் (வயது 21). இவரும் இவரது நண்பர் சஞ்சய் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் உள்ள மழை மலை மாதா கோவிலுக்கு சென்றனர். அங்கேயே இரவு தங்கியுள்ளனர். நேற்று அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருவரும் குளிக்க சென்றனர். அப்போது அஜித் கிணற்றில் தவறி விழுந்தார்.
சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் மூழ்கினார். அவரது நண்பர் சஞ்சய் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் மூழ்கி இறந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே ரூ.6½ லட்சம் கடனை திருப்பி தராததால் விவசாயி கடத்தப்பட்டார். இது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). விவசாயி. நேற்று அவர் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த நபர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்து தப்பியோட முயன்ற திண்டிவனத்தை சேர்ந்த ராஜதுரை என்ற மணிகண்டன் (33), மாதவன் (25), ராஜரத்தினம் (34), மைக்கேல் (35), சந்தோஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி ரூ.6½ லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். அவர் ரூ.6½ லட்சம் மற்றும் அதற்கான வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது குறித்து பார்த்தசாரதியிடம் போனில் தொடர்பு கொண்ட லட்சுமணன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு பார்த்தசாரதி வாங்கிய கடனை திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் திண்டிவனத்தை சேர்ந்த கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை கடத்தி வருமாறு கூறியுள்ளார். கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் பார்த்தசாரதியின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கே பார்த்தசாரதி இல்லாததால் திரும்பி திண்டிவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பழையசீவரம் அருகே வரும் போது பார்த்தசாரதியை பார்த்த கூலிப்படையினர் அவரை காரில் கடத்தினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள லட்சுமணனை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செம்மஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் பாபு அவர்களின் கண்காணிப்பில், அடையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில் ஆன்-லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் ஆட்களை 2 நாட்களாக பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
இதில் தனியார் நிறுவன ஆன்லைன் உணவு வினியோக செய்யும் ஊழியர் விஜய் (வயது 27) என்பவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் உள்ள உணவு வினியோகம் செய்வது போல் கஞ்சாவும், சிகரெட்டில் வைத்து உபயோகிக்கும் கஞ்சா ஆயில், சிரஞ்சுகளும் பெட்டியில் வைத்திருந்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதே குடியிருப்பில் தங்கியுள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த புகழ்(வயது 26), அவருடைய நண்பர்களான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(27), சென்னை அண்ணாநகரைச்சேர்ந்த நவோதித் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஒன்றாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரி என்ற நிலையில், புகழ் மற்றும் நவோதித் வேலையில்லாமல் இருந்துள்ளனர். அருண் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார்.
இவர்கள் 3 பேரும் விலையுயர்ந்த கார் மூலம் ஆந்திரமாநிலம் நெல்லூர் சென்று கஞ்சா கடத்தி வந்து தனியார் ஆன்லைன் ஊழியர் விஜய் மூலம் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவற்றை வினியோகம் செய்துள்ளது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 10½ கிலோ கஞ்சா, 10 மி.லி. அளவுள்ள கஞ்சா ஆயில், 16 சிரஞ்சுகள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். 4 பேரையும் கைது செய்த செம்மஞ்சேரி போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.