search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் மேம்பாலத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
    X
    வண்டலூர் மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    வண்டலூர் பூங்கா அருகே ரூ.55 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    711 மீ நீளம், 22 மீ அகலம் கொண்ட 9 வழி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

    மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் அரசு பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

    * பணிகளை முடித்து பெருங்களத்தூர் மேம்பாலத்தை 2021 அக்டோபரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×