என் மலர்

  செய்திகள்

  உயிரிழப்பு
  X
  உயிரிழப்பு

  அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  அச்சரப்பாக்கம்:

  பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் அஜித் என்கிற பாலமுருகன் (வயது 21). இவரும் இவரது நண்பர் சஞ்சய் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் உள்ள மழை மலை மாதா கோவிலுக்கு சென்றனர். அங்கேயே இரவு தங்கியுள்ளனர். நேற்று அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருவரும் குளிக்க சென்றனர். அப்போது அஜித் கிணற்றில் தவறி விழுந்தார்.

  சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் மூழ்கினார். அவரது நண்பர் சஞ்சய் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் மூழ்கி இறந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×