என் மலர்
செங்கல்பட்டு
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 48). இவர் திருப்போரூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல வேலைக்கு சென்ற துளசிதாஸ் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரத்தை அடுத்த பையனூர் என்ற இடத்தில் வரும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் நிலைதடுமாறி அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த துளசிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கேளம்பாக்கம் அருகே செல்போன் பறிப்பு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர், இளவந்தாங்கல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பவர் நஜ்ரூல் இஸ்லாம். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். தையூர் இளவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலை முடித்து நடந்து சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் நஜ்ரூல் இஸ்லாமை கத்தியால் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். காயம் அடைந்த நஜ்ரூல் இஸ்லாம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நஜ்ரூல்இஸ்லாம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் தையூர், இளவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 19) மற்றும் அவரது நண்பர் அனில் என்ற சுனில் குமார் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன் கைப்பற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 158 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 158 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 723 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 672 ஆக உயர்ந்தது. 1,086 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சகாதார நிலையத்திற்குட்பட்ட 35, 39 வயதுடைய ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 381 உயர்ந்தது. 487 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 37 ஆயிரத்து 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 90 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,052 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 618 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

கூடுவாஞ்சேரியில் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பிரியா நகரை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 28) , இவர் கோவளம் அருகே உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஞானதாஸ் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஞானதாஸ் கொலை வழக்கில் கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த பிரபாகரன் (26), கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வினித்குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்:
பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து பா.ஜ.க.வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற நடிகை குஷ்பு கோவளம் அருகே கைது செய்யப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். அங்கு திரண்ட பா.ஜ.க.வினர் திருமாவளவன் எம்.பி.யை தரக்குறைவாக பேசினர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் தலைமையில் அந்த கட்சியினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது மட்டும் தடியடி நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மண்டல செயலாளர் விடுதலைசெழியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வன்னியரசு, சிறுத்தை கிட்டு, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்தும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் கோஷமிட்டனர்.
கூடுவாஞ்சேரியில் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பிரியா நகரை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 28). இவர் கோவளம் அருகே உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஞானதாஸ் மர்ம நபர்களால் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், ஞானதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஞானதாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இந்த கொலையில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மின்சார ஜங்சன் பாக்சில் சார்ஜர் போட்டு இருந்த செல்போனை ஈரமான கையால் எடுத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பெரம்பூர்:
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகராசா. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். இவர்களில் 2-வது மகன் சஞ்சய் (வயது 17). 12-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளார். இவரது உறவினரான பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1-வது தெருவில் தங்கி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் சென்னை வந்த சஞ்சய், தனது உறவினர் மற்றும் அவரது நண்பர்களுடன் தங்கி, இங்கேயே பழச்சாறு கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சஞ்சய், செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு குளிக்க சென்றார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. குளியல் அறையில் இருந்த அவர், ஈரமான கையுடன் செல்போனை எடுப்பதற்கு சார்ஜ் போட்டு வைத்திருந்த மின்சார ஜங்ஷன் பாக்சை கையில் எடுத்தார்.
அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ஜங்ஷன் பாக்ஸ் சுவிட்ச்சை ஆப் செய்துவிட்டு பிரகாசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து சஞ்சையை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சஞ்சய் மின்சாரம் தாக்கி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சயின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், பலியான சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சயின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 143 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்தது. 1,239 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 37 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 ஆயிரத்து 421 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,233 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 615 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 42, 58, 42 வயதுடைய ஆண்கள், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆண், எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஆண், 22 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 119 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 24 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 377 பேர் உயிரிழந்துள்ளனர். 460 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (வயது 52). இவரது மகன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தனது மகனை பார்ப்பதற்காக கயல்விழி புதிய பஸ் நிலையம் அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்தபடி பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கயல்விழி அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவரது மனைவி இந்திராணி. இவர்கள் இருவரும் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் கிராமத்திற்கு சென்றனர். திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம், 2 பட்டு சேலைகள் திருடப்பட்டது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி அம்மாள் என்பவருடைய வீடு, சுப்பிரமணி என்பவருடைய வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் வீட்டில் எந்தவிதமான பொருட்களும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது.
இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 169 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 654 ஆக உயர்ந்தது. 1,314 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 165 பேர் கொரோனா தொற்றால் இதுவரையில் மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 ஆயிரத்து 66 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 1,286 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 614 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண், 22 வயதுடைய ஆண், 39 வயதுடைய ஆண், 68 வயதுடைய முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் நேற்று காஞ்சிபுரம் மாவடத்தில் 140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்தது. 597 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அச்சரப்பாக்கம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், போந்தூர் ஊராட்சி, வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் குருநாதன் (வயது26).
இவர் மோட்டார் சைக்கிளில் அச்சரப்பாக்கம் சென்று விட்டு வீடு திரும்பும்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருக்கருணை பகுதியில் வளைவில் திரும்பும்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குருநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். அச்சரப்பாக்கம் போலீசார் குருநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.