என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கூடுவாஞ்சேரியில் டிரைவர் குத்திக்கொலை
கூடுவாஞ்சேரியில் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பிரியா நகரை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 28). இவர் கோவளம் அருகே உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஞானதாஸ் மர்ம நபர்களால் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், ஞானதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஞானதாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இந்த கொலையில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






